கடும் எதிர்ப்பால் கொழும்பு திரும்புகின்றனர் சனல் 4 ஊடகவியலாளர்கள்!

கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்துக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஊடகவியலாளர் மக்ரே தனது ருவிட்டரில் தாம் விருப்பமின்றியே கொழும்புக்கு செல்வதாக தெரிவித்திருக்கின்றார் கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு...

வட மாகாண ஆளுநரை மாற்றும் பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாண ஆளுநரை மாற்றுவதற்கான பிரேரணை வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை மாற்ற வேண்டும் என்ற பிரேரணையினை வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சபையில் முன்வைக்க வடமாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் ரவிகரன் அந்தப் பிரேரணையினை வழிமொழிய...
Ad Widget

இசைப்பரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை: ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி கோரிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஊடகவியலாளராக அறியப்பட்ட இசைப்பிரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பியினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்;ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் சார்பாக ஈ.பி.டி.பி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

வீடுகள் இடிப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி படையினருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினரால் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ்ப்பாண கட்டளை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த தகவலை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனிடம் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். நேற்று காலை சம்பந்தன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார்.வலிகாமம்...

ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் பெற்றுக்கொண்டவைகளை விட இழந்துகொண்டவைகளே அதிகம் – வடக்கு மாகாண சபை எதிர்கட்சித்தலைவர் கமலேந்திரன்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் இன்றைய தினம் (25) வடக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வில் ஆற்றிய கன்னிஉரை. எண்ணி முடிதல் வேண்டும் நல்லதே எண்ணவேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் என்றுரைத்தான் பாரதி! கௌரவ அவைத்தலைவர் அவர்களே! உருண்டு...

வடமாகாண சபையின் அடுத்த அமர்வு நவம்பர் 11ல்

வடமாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி நடைபெறுமென தவிசாளர் கந்தையா சிவஞானம் அறிவித்துள்ளார். வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிலையில் முதலாவது அமர்வின் முதல் நிகழ்வாக தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன. தவிசாளாராக கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக அன்ரனி ஜெகநாதனும்...

பிபிசி நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று மாலை வெளியாகியது!

போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ? இலங்கையின் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைப்பதற்கு முதற்தடவையாக இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. உலகில் நீண்ட காலம் நடந்த உள்நாட்டுப் போர் ஒன்று முடிந்து 4 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும்,...

ஒற்றுமையாக வடக்கு மாகாணசபைத் தேரை எமது மக்களுக்காக இழுத்துச் செல்வோம்!- அனந்தி சசிதரன்

முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய அளவில் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்பு பாராட்டவல்ல இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஏதோ முடிந்ததை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவையே. இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது கன்னி உரையில் அனைவரையும் மக்களிற்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்து அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு...

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது முதலமைச்சரின் பொறுப்பு! பத்திரிகையாளர்களிடம் கோத்தபாய தெரிவிப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று சந்தித்த போது தெரிவித்தார். வடமாகாணசபை குறித்து இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துகள் வருமாறு...

நாங்களும் யாழ்ப்பாணத்தவரே! நாவற்குழி மக்களின் கெஞ்சுதல்கள்!

Video streaming by Ustream

மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள்புனரமைப்பு! உயர்மட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என கூட்டமைப்பு

கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை துப்புரவு செய்வதற்கு கரைச்சி பிரதேச சபையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பிரதேச சபையிடம் கூட்டமைப்பின் உயர்மட்டம் விளக்கம்கோரும் எனவும் தெரிவித்திருக்கின்றன. மேற்படி பிரதேச சபையில் 17உறுப்பினர்களினால் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டிருந்த நிலையில்,...

மாகாண சபை உறுப்பினர்களில், மூவர் வவுனியாவில் சத்தியப் பிரமாணம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தம்பியுமான க.சர்வேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை (16.10.13) வவுனியாவில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். வவுனியா சட்டத்தரணி க.தயாபரன் இவர்களுக்கு சத்தியப்பிரமாணம்...

வடக்கின் முதலாவது பயிர் மருத்துவ முகாம்

விவசாயிகள் பயிர்களில் ஏற்படும் நோய்களை அடையாளம் காணவும், அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறவுமென வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவமுகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதலாவது முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை (15.10.2013) புத்தூர் நிலாவரையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும்,...

அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் வடமராட்சி கிழக்கு வாழ் மக்கள்:

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தின் போதும் கடந்த காலங்களில் நடைபெற்ற போரின் போதும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.வடமராட்சி கிழக்கின் உடுத்துறை, மருதங்கேணி, தாளையடி, ஆழியவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை வீடுகள் தோறும் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,...

நாவற்குழியில் இருந்து வெளியேற மாட்டோம்! விரட்ட முயன்றால் மோதவும் நாம் தயார்!- சிங்கள மக்கள்

நாவற்குழியில் அமைந்துள்ள அரச காணியில் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு அந்தக் காணிகளை உரித்தாக்கும் முயற்சி நேற்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று அதை தடுத்து நிறுத்த முயன்ற சிறீதரன் எம்.பிக்கும் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இது தங்களுக்கு சொந்தமான இடம் எனவும் அந்த இடத்தில் இருந்து தாம் ஒருபோதும் வெளியேறிச் செல்லப்...

வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அரசு நிறைவேற்றியேயாக வேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. இணைந்து செயற்படப் போவதுமில்லை. நாம் சட்டத்தின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்....

தேர்தலின் பின்னர் இராணுவத்தினரை சீண்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. -இராணுவத் தளபதி

எமது இராணுவம் மிக அர்ப்பணிப்புள்ளவர்கள் என்பதுடன் அவர்கள் எமது நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றால் அதனை தடுப்பதற்கு எப்போதும் தயாராகவே உள்ளனர்' எனஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கா தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இராணுவ வீரர்களுடனான சந்திப்பின்...

13ம் திருத்தத்திற்கு அப்பால் வடகிழக்கு இணைந்த தீர்வினை நாடுமா வடமாகாணசபை?: பீடாதிபதி எஸ்.சத்தியசீலன்

புத்திசாலித் தனமான வகையிலே 13வது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று வட கிழக்கு இணைந்த சமஷ்டி மூலமான ஓர் தீர்வை முன்வைப்பது இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த நாட்டினுடைய எதிர்காலத்திற்கும் சிறந்தது என யாழ்.பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புக்கள் பீடாதிபதி எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பட்ட துன்பங்களின் எதிர்விளைவாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை...

யாழில் மகனை தாக்கிய பொலிஸாரைத் தடுக்க முயன்ற தாய் மீது கொடூரத் தாக்குதல்

யாழ்ப்பாணம் குடத்தனை வடக்கினைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மீது ஆண் பொலிசார் கொடூரமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.திருமதி யோகராசா கமலாதேவி (வயது 50) என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த பெண்ணின் மகனான யோகராசா கஜேந்திரன் (வயது 19) மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, குடத்தனையிலுள்ள அவரது வீட்டிற்கு வாகனத்தில் கொண்டு வந்த...

வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் கொழும்பில் இருவர் சத்தியப்பிரமாணம்

வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் கொழும்பில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த வாரம் நிகழ்ந்த சத்தியப் பிரமாண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளாமைக்கு அவரது மனைவி விபத்தில் சிக்கியதும், கட்சி தலைவரின் இரட்டை நிலைபாடுமே காரணம் என...
Loading posts...

All posts loaded

No more posts