- Thursday
- August 20th, 2026
விவசாய ,சூழல் அமைச்சு அலுவலக நிகழ்வுகளில் குடிபானங்களை பரிமாறும் போது ”பெப்சி ”கொக்கோ கோலா” போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென் பானங்களை தவிர்க்குமாறும் பதிலாக உள்ளுர் பானங்களை பரிமாறுமாறும் விவசாய ,சூழல் அமைச்சர் ஐங்கரநேசன் பணித்துள்ளார். நேற்று தனது அமைச்சு பதவி பொறுப்புக்களை பொறுப்பேற்கும் வேளையில் இதனை அவர் தெரிவித்தார்.எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை...
நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாதென கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை மக்களும் அடுத்து தேர்தலொன்று வரும் வரை ஒதுங்கியிருக்கும் மனோபாவத்தினை கைவிட வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்திரிகையாளர் மாநாட்டில்...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உயர்பீடம் இன்று முற்பகல் யாழ் கந்தரோடையில் சந்தித்து கலந்துரையாடியது.இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் இது தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தவகையில் புளொட்டின் வட மாகாணசபை...
வடமாகாணசபை அவைத்தலைவராக சீ.வி.கே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்டக்கிளைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளருமாவார். பிரதி அவைத்தலைவராக முல்லைத்தீவு உறுப்பினர் அன்ரனி நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று(9) இரவு நடைபெற்ற கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தின் சந்திப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினமே அமைச்சர்கள் தெரிவு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை தெரிந்ததே. வட மாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை(11) வீரசிங்கம்...
வடமாகாண முதலமைச்சராக சத்திப்பிரமாணம் செய்து கொண்ட க.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர்...
காணி அதிகாரம் மத்திய அரசுக்குரியது என்று உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால், மாகாண சபைக்குரிய காணி அதிகாரங்கள் பறிபோய் விடும் என்று எவரும் கிலேசம் அடையத் தேவையில்லை என்று மூத்த சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மத்திய மாகாண சபையில் அமைந்துள்ள தோட்டக் காணி ஒன்று தொடர்பான வழக்கில், காணி அதிகாரம் மத்திய...
வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.இவர் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே ஆட்சிக்கு யார் வந்துள்ளார்கள் என்பதை பார்க்காமல் இவ்வதிகாரங்கள் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். “...
மகிந்த இராஜபக்ச ,கருணாநிதி, காந்தி குடும்ப அரசியல்களினை பெரும்பாலும் மக்கள் பொதுவாக எதிர்த்தே வருகின்றனர். ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறேது என்று கேட்பது தமது இனத்தின் பரப்பரையினை குறித்தா அல்லது குடும்பங்களைக்குறித்தா என்ற கேள்விகள் காலத்துக்கு காலம் மக்களை சிந்தனையில் உதித்தவண்ணம் இருந்தாலும் ஏதோ சாட்டுக்களை முன்வைத்து அல்லது இயலாமையின் வெளிப்படையாக இது...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் பதவியை சம்பந்தன் அவர்கள் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கவுள்ளார் என்ற வதந்தியினை இணையத்தளம் ஒன்று பரப்பிவருகின்றது. அதில் எந்தவித உண்மையும் இல்லை என கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றன. மேலும் போனஸ் ஆசனங்கள் அமைச்சர் தெரிவுகள் தொடர்பிலும் வதந்திகைள் உலாவருகின்றன. அதற்காக சிலர் பொது அமைப்புகள் ஊடாக கூட்டமைப்பின் தலைமையிடம் சிபார்சுகளை அனுப்பிவருவதாக கூட...
வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜை ஒருவருக்கு வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அயூப் நஸ்மீன் என்பருக்கே அந்த தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்....
காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றிற்கு தீர்ப்பு வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்...
நவநீதம்பிள்ளை அம்மையாரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் உரையைத் தாங்கிய பிரதிகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஐநாவின் மனித உரிமைகள் உதவி ஆணையாளரினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும்இ...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இன்று காலை 9.30மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலத்தில் விசாரணைக்காக சென்றிருந்தார். விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணையின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் செய்யப்படும் மக்கள் உதவிக்கான நிதி வளங்கள் எப்படி கிடைக்கின்றன...
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்)இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடியதன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னைஉங்களுடைய பிரதிநிதியாக சர்வதேசத்திற்கும்அடையாளப்படுத்தி – அங்கீகாரம் அளித்தமைக்கான நன்றியைஎப்படி வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குரியவளாக, என்றும்உங்களுக்கான பணியை உறுதியுடன் தொடர்வது தான்அர்த்தமுள்ள நன்றியாக இருக்கும் என்பதே எனது...
இலங்கை அரசாங்கம் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வடக்கு தேர்தல் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் ஸாகியினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை வருமாறு: இலங்கையில் மூன்று மாகாணங்களில் செப்டெம்பர் 21ம் திகதியன்று நடத்தப்பட்ட வெற்றிகரமான தேர்தல்களையிட்டு ஐக்கிய அமெரிக்கா இலங்கை மக்களைப்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் Twitter சமூக வலைத்தளம் ஊடாக கேள்வி கேட்பதற்கு தற்போது சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68வது அமர்வில் உரை நிகழ்த்தியதன் பின்னர் நியூயோர்க்கிலிருந்து டுவிட்டர் ஊடாக கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார். செப்டெம்பர் 24ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி ராஜபக்ஷ உரை நிகழ்த்தவுள்ளார். அதைத் தொடர்ந்து...
தமது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு அந்த காயம் மறைவதற்குள் கொலையாளியிடம் நிவாரணங்களை பெற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் கொலையாளியுடன் புகைப்படத்திற்கு காட்சி கொடுக்கும் தென் பகுதி சிங்களவர்களுக்கு வடபகுதி தமிழர்கள் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளனர். இவ்வாறு சிங்கள இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.படுகொலையாளிகளுடன் எந்த இணக்கமும் இல்லை என்பதை தமிழர்கள் வெளிகாட்டியுள்ளனர் என அந்த சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆசிரியையை...
வடமாகாண சபைத் தேர்தல் தோல்வித் தகவலுடன் நேற்று அதிகாலையில் நியூயோர்க் நகருக்கு பயணமாகிச் சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் நாளை செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2005 ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் 6வது தடவையாக...
அமையவுள்ள வடமாகாணசபை அரசில் முதலமைச்சரால் 4 அமைச்சர்கள் வெற்றிபெற்ற உறுப்பினர்களில் இருந்து நியமிக்கப்படுவர்.அந்த நான்கு அமைச்சர்களும் யார் என இப்போதே ஆதரவாளர்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.அவற்றுக்கு பொருத்தமானவர்களை நியமிக்கவே்ணடிய தேவை கூட்டமைப்பினருக்கு இருக்கிறது. அவர்கள் முதலமைச்சருடன் ஒத்துழைக்கக் கூடிவர்களாகவும் துறைசார்ந்த விற்பன்னர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமாகின்றது.அதேவேளை கூட்டமைப்பில் உள்ள கட்சிகளையும் சமாதானப்படுத்தவேண்டியும் இருக்கும் இது தொடர்பில் முதலே கருத்தொற்றுமை மற்றும்...
வவுனியா மாவட்டத்தில் அரசுதரப்பு பெற்ற 2 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும் ஏ.ஜயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்று 2 சிங்கள மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். வவுனியாவில் 16638 வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் 41225 வாக்குகளை தமிழரசுக்கட்சியும் பெற்றிருந்தன.வவுனியாவில் அரசுதரப்புக்கு வழங்கப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
