Ad Widget

வடமாகாண சபையில் 2 சிங்கள உறுப்பினர்கள்! வவுனியா மாவட்டம் வழங்கியது

வவுனியா மாவட்டத்தில் அரசுதரப்பு பெற்ற 2 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும் ஏ.ஜயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்று 2 சிங்கள மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். வவுனியாவில் 16638 வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் 41225 வாக்குகளை தமிழரசுக்கட்சியும் பெற்றிருந்தன.வவுனியாவில் அரசுதரப்புக்கு வழங்கப்பட்ட வாக்குகளில் தமிழர்களின் வாக்குகள் தமிழ் வேட்பாளர்களிடையே சிதறியதே தமிழ் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படாமைககு காரணம் என கூறப்படுகின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வவுனியாவில் 4 ஆசனங்களை பெற்றது. இதில் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 விருப்பு வாக்குகளையும்,கந்தர் தாமோதரம் லிங்கநாதன் 11,901 விருப்பு வாக்குகளையும் ம. தியாகராசா 11,681 விருப்பு வாக்குகளையும் ஐ.இந்திரராசா 11, 535 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை அரசு தரப்புக்கு மொத்தமாக கிடைத்த 8 ஆசனங்களில் 2 சிங்களவர்களும் 3 முஸ்லிம்களும் 3 தமிழர்களும் உள்ளடங்குகின்றனர். முல்லைத்தீவில் 1 முஸ்லிம் உறுப்பினரும் மன்னாரில் 2 முஸ்லிம் உறுப்பினர்களும் வவுனியாவில் 2 சிங்களவரும் கிளிநொச்சியில் 1 தமிழரும் யாழ்ப்பாணத்தில் 2 தமிழரும் தெரிவாகியிருந்தனர்

Related Posts