Ad Widget

வடக்குமாகாணசபை மற்றும் கூட்டமைப்பு தொடர்பில் வதந்திகள்!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் பதவியை சம்பந்தன் அவர்கள் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கவுள்ளார் என்ற வதந்தியினை இணையத்தளம் ஒன்று பரப்பிவருகின்றது. அதில் எந்தவித உண்மையும் இல்லை என கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றன.

மேலும் போனஸ் ஆசனங்கள் அமைச்சர் தெரிவுகள் தொடர்பிலும் வதந்திகைள் உலாவருகின்றன. அதற்காக சிலர் பொது அமைப்புகள் ஊடாக கூட்டமைப்பின் தலைமையிடம் சிபார்சுகளை அனுப்பிவருவதாக கூட தகவல்கள் வெளிவருகின்றன.இருப்பினும் புதுமுகங்கள் எவருக்கும் அமைச்சு பதவி வழங்குவதற்கான சாத்தியம் இல்லவே இல்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னரே பேசப்பட்டவர்களில் இருந்து தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தான் அமைச்சரவையினை அலங்கரிக்கப்போகின்றார்கள் என்று  நம்பப்படுகின்றது.கட்சி ரீதியிலான செல்வாக்குகள் அதில் கட்டாயம் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

கூட்டமைப்பின் தலைமை இதுவிடயத்தில் தாமதிக்கும் தருணங்களில் பல தலைகள் இவ்வாறு வதந்திச்செய்திகளில் உருட்டப்படும் என்பதை மறுக்க முடியாது

தொடர்பான செய்திகள்

http://www.e-jaffna.com/archives/18858

http://www.e-jaffna.com/archives/18777

http://www.e-jaffna.com/archives/18768

Related Posts