- Thursday
- August 20th, 2026
வடமகாணசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோகவெற்றியீட்டி 36 ஆசனங்களில் 28 இனை கைப்பற்றி மேலதிகமான 2 போனஸ் ஆசனங்களினையும் பெற்றுக்கொண்டிருக்கின்றது. 1988 மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தின்இலக்கம் 2 பிரிவு 62 இற்கமைவாக இங்கு கிடைத்துள்ள இந்த 2 போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு வழங்கவேண்டும் என கட்சியின் செயலாளரினால் தேர்தல் ஆணையாளருக்கு சிபார்சு செய்யப்படவேண்டும். இந்த போனஸ் ஆசன...
வட மாகாணத்தில் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:- வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்...
தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு பின் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மாகாண சபை சில இடங்களில் அரசாங்கத்துடன்...
நடந்து முடிந்த தேர்தலில் ஆசனங்கள் முடிவாகியுள்ள நிலையில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கூட்டமைப்பில் தோல்வியடைய உள்ள அரசதரப்பில் வெற்றிபெறவுள்ள வேட்பாளர்கள் யார்? என்ற ஆவலில் ஆதரவாளர்கள் உள்ளனர். இன்னும் சில மணிநேரத்தில் இதற்கான விடை தெரிந்துவிடும். கூட்டமைப்பு 30 இடங்களையும் அரசு 7 இடங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 1 இடத்தினையும் பெற்றிரு்கின்றது. அதே நேரத்தில் அடுத்ததாக...
வடமாகாணசபை தேர்தல் 2013 இல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றியுடன் வட மாகாணசபையினை கைப்பற்றி விட்டது.முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அடுத்த சிலதினங்களில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக வாக்குகளை பெற்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூடிய ஆசனங்களை பெற்றுள்ளது. இதுவரை முழுமையாக பெறுபேறுகள் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி முல்லைத்தீவில் அங்கு உள்ள 5 ஆசனங்களில் 4 இனையும்...
வவுனியா மாவட்டமும் மன்னார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வசமாகியது 11 ஆசனங்களில் 7 இனை கைப்பற்றியது. வவுனியாவில் 6 ஆசனங்களில் 4 இனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் 2 இனை ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும். மன்னாரில் 5 ஆசனங்களில் 3 இனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் 1 இனை ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும் 1 இனை முஸ்லிம் காங்கிரசும் பெற்றுக்கொண்டிருக்கின்றன....
கிளிநொச்சி மாவட்டத்தின் தபால் மற்றும் வாக்களிப்பு நிலையத்தில் அளிக்கப்பட்ட வாக்களிப்பின் உத்தியோக பூர்வ முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி பதிவாகிய வாக்குகள் 68600, அளிக்கப்பட்ட வாக்குகள் 50194, செல்லுபடியான வாக்குகள் 45459, நிராகரிப்பு 4735, த.தே,கூ பெற்ற வாக்குகள் 37079, ஐ.ம.சு.மு 7897, ஐ.தே.க...
யாழ்ப்பாணத்தில் உள்ள 10 தொகுதிகளாகிய மானிப்பாய் ,வட்டுக்கோட்டை,உடுப்பிட்டி காங்கேசன்துறை,ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்,நல்லூர்,சாவகச்சேரி,பருத்தித்துறை ஆகியவற்றில் அவற்றினை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றிவிட்டது..யாழ் மாவட்டத்தில் இந்த 10 தொகுதிகளுக்காகவும் 16 ஆசனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு 14 ஆசனங்கைள கூட்டமைப்பு கைப்பற்றிவிட்டது.அரசின் இணைப்பு கட்சியான ஈ.பி.டி.பி யின் கோட்டையான ஊர்காவற்துறை தொகுதியினை மிகப்பெரிய வித்தியாசத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிகொண்டிருப்பது முக்கிய விடயமாக...
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மூன்று மாகாணங்களிலும்...
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக குடாநாட்டு மக்கள் மிக உற்சாகமாக வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.வன்முறைகள் பெரியளவில் எதுவும் இதுவரை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த காலங்களைப் போல் அல்லாது இம் முறை வாக்களிக்கும் நிலையங்களில் மக்கள் பெருமளவு கூடியுள்ளமை அவதானிக்க முடிந்தது. நிறைய வாக்காளர்களுக்கு இது தான் முதல் தேர்தலாக இருக்கிறது....
உரிமையா சலுகையா, வரலாற்று முடிவு இன்று தமிழர் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் இன்றைய நாளில் அனைவரும் எழுச்சி கொள்வோம். என்ற தலைப்புடனேயே இன்றைய உதயன் நாளிதழ் வெளிவந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.என உதயன் பத்திரிகை நிர்வாகம் அறிவித்திருக்கிறது தேர்தல் தினமான இன்று உதயன் பத்திரிகையின் பிந்திய பதிப்பு என அச்சிடப்பட்டு விசமிகளால்...
தமிழர்களை ஆளவிட்டால் தங்களை விஞ்சி விடுவார்கள் என்று சிங்கள மக்கள் பயப்படுகின்றனர். – விக்கினேஸ்வரன்
பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே தழிழர்களை உலகமே இன்று திரும்பி பார்க்கின்ற நிலையினை ஏற்படுத்தியுள்ளனர் !உலகில் மிகப்பிரசித்தி பெற்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட மாவீரான பிரபாகரன், தமிழர்களை அடக்கி ஆண்டான் என்றும். பின்னர் அவர் போரில் கொல்லப்பட்டான் என்று தான் உலகம் அறிந்து வைத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றிரவு நடைபெற்ற...
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது. வடக்கு மகாணத்தில் உள்ளவர்களை விட அதற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இந்த வினா பெரிதும் எழுப்பப்படுகின்றது. வடக்குமாகாணத்தினைபொறுத்தவரை அவதானிக்கப்பட்ட மக்கள் அலைகள் மற்றும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும்...
கிளிநொச்சி மாவட்ட தேர்தல் மேடைகளில் கலக்கிய கண்ணீர் கசிய வைக்கும் காசிமணியின் கனல்பேச்சு கண்ணீர் துடைக்குமா என்பதை 21ம்திகதி கொம்பு சீவிய காளைகளைாய் நம்பி உள்ள மக்கள் விடைசொல்வார்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர் அடங்கிய குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று 18.09.2013 (இன்று) காலை 9 மணிக்கு உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், இ.சரவணபவன் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்த போது நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் பயணத்தை அந்த கட்சி மேற்கொண்டு வருவது தெரிவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை தேர்தலுக்கு பின்னர் தனது தேர்தல்...
Loading posts...
All posts loaded
No more posts









