Ad Widget

வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!-எண்ணும் பணிகள் ஆரம்பம்

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.தேர்தலில் வாக்களிப்பதற்காக பத்து மாவட்டங்களிலும் 3612 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்குகளை எண்ணுவதற்காக பெட்டிகள் பலத்த பாதுகாப்போடு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணப்படும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வடமாகாண விபரம் வருமாறு

யாழ்ப்பாணம் 63%
கிளிநொச்சி 71%
வவுனியா 65%
முல்லைத்தீவு 63%
மன்னார் 75%

இருப்பினும் இந்த வீதங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. உத்தியோக பூர்வ முடிவுகள் வெளிவரும்போது உண்மையான வாக்களிப்பு வீதங்கள் தெரியவரும்.

மாகாணத்தின் மொத்த வாக்காளர் தொகை அட்டவணையில் தரப்பட்டுள்ளது

Related Posts