யாழ் தேவி பரீட்சார்த்த ரயில் விபத்தில் ஒருவர் கிளிநொச்சியில் மரணம்!

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது....

யாழ் பல்கலைக்கழகத்தில் நூல் கொள்வனவில் நிதி மோசடி! விசாரணைகள் ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழகத்தில் நூல்கள் கொள்வனவுசெய்யப்பட்டது தொடர்பில் பல லட்சம் ரூபா கையாடல் செய்யப்படிருப்பதாக தெரியவந்துள்ளது.கொள்வனவு செய்யப்படாத புத்தகங்களுக்காக பல லட்சம் ரூபா பணம் நிறுவனம் ஒன்றிற்கு காசோலையால் செலுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாண்டுக்கான புதிய கொள்வனவுக்கு விண்ணப்பித்த வேளையில் முன்னரேயே இவ்வாண்டில் கொள்வனவு நடைபெற்றிருப்பதான பதிவுகள் காணப்பட்டதனால் அவற்றினை உறுதி செய்ய முற்பட்ட வேளையில் இந்த மோசடி...
Ad Widget

வடமாகாணசபை தேர்தல் 2013 இணையக் கருத்துக்கணிப்பு

இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் எதிர்வரும் 21.09.2013 அன்று நடைபெற உள்ளது. இதுதொடர்பிலான இணையவழி கருத்துக்கணிப்பினை நமது EJAFFNA இணையத்தளம் நடாத்துகின்றது.இது ஒரு எழுந்தமானமான கருத்துக்கணிப்பு.இதன் முடிவுகள் உண்மையான தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்காது. வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் எமது இணையத்ததளத்தினை பார்க்கின்றார்கள் என்றோ அல்லது இங்கு வாக்களித்தவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்காளர்கள் என்பதற்கோ. ஒருவர் ஒருமுறை மாத்திரம்...

கட்சிகளின் வடமாகாண தேர்தல் பாடல்கள் ஒரே இணைப்பில்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் பாடல் 1 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் பாடல் 2 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் விவரணச்சித்திரம் அங்கஜன் இராமநாதனின் தேர்தல் பாடல் அங்கஜன் இராமநாதனின் தேர்தல் பாடல் 2 அங்கஜன் இராமநாதன் - பாடல் 3 ஈ.பி.டி.பி கட்சியின் தேர்தல் பாடல்கள் பாடல் 1 பாடல் 2 வேட்பாளர்கள் தமது பாடல்களை அனுப்பிவைப்பின்...

உள்ளே பொலிசார் மேலாடையுடன் கடமையில்! பக்தர்களுக்கு வெளி வீதியில் கூட மேலாடை தடை!

யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமான ஆலயமாக விளங்குவது நல்லூர்க் கந்தன் ஆலயமாகும். நிர்வாகம் முருகன் வெளிவீதியுலா வரும் போது கூட முருகனுக்கு அருகில் எந்த ஆண்களும் மேலாடையுடன் வரக்கூடாது என பல கோவில் அடியாட்கள் மூலமாக தெரிவித்து அருகில் நிற்கக்கூட விடுவதில்லை.அதை அவர்கள் தெரிவிக்கும் முறையினால் பலர் அசளகரியத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகி உளத்தாக்கத்தின் காரணமாக கோவிலுக்கே வராமல்...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டமளிப்பு! தேர்தல் விதிமுறை மீறல்?

“ஆறுதல்” நிறுவனத்தில் முன்பள்ளி டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்திசெய்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் 2013.09.08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. வடமாகாண சபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சுந்தரம் டிவகலாலா என்பவர் “ஆறுதல்” என்ற பெயரில்...

அங்கஜனின் தந்தை 14 நாள் விளக்கமறியலில்! சர்வானந்தனையும் விசாரிக்க உத்தரவு!

சாவகச்சேரி பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் சர்வானந்தனின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக கைது செய்யப்பட்ட இதேகட்சி வேட்பாளர் அங்கஜனின் தந்தை இராமநாதன் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி நீதிமன்றத்தால் இன்று இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி என்ற காரணத்தினால் அவரது பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது....

கிளிநொச்சியிலிருந்து ஓமந்தைக்கு பரீட்சார்த்த ரயில்

30 வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சியிலிருந்து ஓமந்தைக்கு பரீட்சார்த்த ரயில் சேவையொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த பரீட்சார்த்த சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது ஏற்கனவே வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு கடந்த மாதம் பரீட்சார்த்த ரயில் சேவையொன்று நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது கொழும்பில் இருந்து...

விடுதலைப்புலிகளுக்கு வாகன தேவைகளை பூர்த்தி செய்த கொழும்பு வர்த்தக நிலையம் முற்றுகை

விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்டப்பட்டுள்ளது. அந்த வர்த்தக நிலையத்தின் தலைவரை பயங்கரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் அரசியல் தொடர்புகளை கொண்டிருப்பவர் எனவும் அவர் கொழும்பு 14 சுகததாச...

வணக்க தலங்களில் மிருக பலிக்கு தடை

மத வணக்க தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது. சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரவினால் நாடுமுழுவதிலும் சில குறிப்பிட்ட...

அங்கஜயனின் தந்தை பொலிஸாரால் கைது

சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையாரான இராமநாதன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பொலிஸார் அறிவித்துள்ளனர். சாவகச்சேரியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சாவகச்சேரி வேட்பாளரான குமார் சர்வானந்தாவின் ஆதரவாளர்கள் மீது அங்கஜயனின் தந்தையாரே துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. அதன்படி...

ராமநாதனை கைது செய்யாவிடின் விலகுவோம்; நான்கு வேட்பாளர்கள் சூளுரை!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையான ராமநாதனை கைது செய்யாவிடின் தாங்கள் வேட்பாளர் நியமனத்தை மீளப்பெற்று தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளபோவதாக கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் நால்வர் சூளுரைத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துதெரிவித்த போதே அந்த நான்குவேட்பாளர்களும் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளனர். இந்த...

நவீபிள்ளையை திருமணம் முடிக்க தயார்; மேர்வின் விருப்பம்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நவநீதம்பிள்ளைக்கு நாட்டை சுற்றிக்காட்டுவதற்கு தான் தயாரென்றும் இலங்கையின் வரலாற்றை கற்பித்துக்கொடுத்து அவரை திருமணம் முடித்துக்கொள்வதற்கு தயாரென்றும் பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மருதானையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,இராவணன் முதல் விஜயகுமாரவிற்கு இடம்கொடுத்து...

நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம்;

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் உற்வசம் நடைபெறவுள்ளது. இவ் உற்சவத்தை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உற்வசத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா...

வவுனியாவிலிருந்து புகையிரதம் கிளிநொச்சி வரை வந்தது

வடபகுதிக்கான புகையிரதப் பா தையை அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள் நேற்று முன்தினம் கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதிக்கு புகையிரதத்தில்கொண்டு வரப்பட்டுள்ளது.பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற புகையிரதமொன்றிலேயே இப் பொருட்கள் கிளிநொச்சிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கிளிநொச்சி மக்களுக்கு புகையிரதசேவையை விரைவாக வழங்குவதற்காக இப் பாதை அமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன. இவ் வருட இறுதிக்குள் கிளிநொச்சிக்கு...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா. – வேட்பாளர் பட்டியல் வெளியாகியது

வடமாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈ.பி.டி.பி) முதன்மை வேட்பாளராக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசகர் சின்னத்துரை தவராசா போட்டியிடவுள்ளார்.ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், சீறிரெலோ கட்சியும் போட்டியிடுகின்றன. இதன்பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள்...

கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் யாழ்.வேட்பாளர் விபரம்

வடக்கு மாகாகண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியாகியுள்ளது. (more…)

தமிழரசுக்கட்சியின் ஆசனப்பங்கீட்டில் இழுபறி 2 பிரதேசசபை உறுப்பினர்கள் இராஜினாமா மிரட்டல்?

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுகட்சியின் சார்பில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பிலான இறுபறிகளின் தொடராக தமிழரசுக்கட்சியின் மூத்த தூண்களாக கருதப்படுகின்றவர்களில் ஒருவர் கட்சிஅங்கத்துவத்திலிருந்து விலகியிருப்பதாகவும் மற்றொருவர் விலகுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.அவ்வகையில் தனக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்பதன் பின்னணியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் பொ.கனகசபாபதி தமது அங்கத்துவம் மற்றும் தற்போது வகித்து...

தமிழீழப் பிரகடனத்தை வரதர் ஒருபோதும் செய்திருக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன் !

வட கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தனித் தமிழீழ பிரகடனத்தை ஒருபோதும் செயிதிருக்கவில்லை, ஏழு அம்சக் கோரிக்கையினையே அவர் முன்வைத்திருந்தார் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழான அதிகாரங்களான நடைமுறைப்படுத்த வட மாகாண சபைக்கு அனுமதியளிக்கப்படா...

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பெயரில் அறிக்கை

வடமாகாண தேர்தல் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.ஆயினும் கையொப்பமிட்டவரின் பதவிநிலையோ அல்லது பெயரோ அதி்காணப்படவில்லை.அறிக்கை ஒன்றியத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதா என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. அறிக்கை வருமாறு. மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம்...
Loading posts...

All posts loaded

No more posts