யாழ் மாவட்டம் அண்மைக்காலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.-அரச அதிபர் கூறுகிறார்

யாழ் மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த யாழ் மாவட்டத்தின் நிலமை அண்மைக்காலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.மேற்க்கண்டவாறு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அபிவிருத்திப் பணிகளை அறிகையிடல் சம்பந்தமான ஒரு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்...

சுயேட்சையாக போட்டியிடுங்கள் சட்டத்தரணி குருபரன் கூறும் ஆலோசனை!

சிவில் சமூகத்தினுடைய நிலைப்பாடு வட மாகாண சபை தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் எங்களுடைய கொள்கை நிலைப்பாடு தமிழ் தேசிய அரசியலில் இருக்கும் எந்தவொரு கட்சியும் நேரடியாக மாகாண சபை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதாகும். இந்த நிலைபாட்டை நாம் 2010 முதலே எடுத்து வந்துள்ளோம். 13ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்வை...
Ad Widget

வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக முஸ்லிம் ஒருவர் போட்டியிடவுள்ளார் !

முஸ்லிம் புத்திஜீவிகள் குழுவினருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் ஒருவரை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் களமிறக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பில் தமிழ்...

முன்னாள் தளபதி எழிலனின் மனைவி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கம்?

வடமாகாண தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. யாழ் மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டிற்கான தெரிவுக்கூட்டத்தின் அடிப்படையில் மொத்தமுள்ள 19 இடங்களில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில்...

கந்தன் ஆலயத்தின் உள்ளே காலணியுடன் காவல்துறை

வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்மண்டபத்தில் அரசியல்வாதி ஒருவரின் பாதுகாப்புக்காக வந்த ஆயுதம் தரித்த சிறப்பு காவல்துறையினர் காலணியுடன் பிரவேசித்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை ஊடகவியலாளர்களின் கமெராவில் சிக்கி நியு யப்னா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. காலணியுடன் சர்வசாதாரணமாக காணப்படும் அந்த காவல்துறையினரின் செய்கை இந்துக்களின் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதே தெய்வ...

பழைய தட்டச்சு பொறிகளைத் தேடுகிறது ரஷ்யா

ரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக நெருக்கமான நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் லட்சக் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டமையும், மிக...

ஜனாதிபதி – சம்பந்தன் சந்திப்பு

இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் இன்று காலை அவரை சந்தித்துப் பேசினார். பிரிபடாத- ஐக்கிய இலங்கைக்குள்...

‘மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது’ -அமைச்சரவை

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மாகாணசபைகளுக்கான...

மகாசேனுக்காக மன்னிப்புக் கோரிய இலங்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு மகாசேன் என்று சூட்டிய பெயரை சிறிலங்கா விலக்கிக் கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புயலுக்கு மகாசேன் என்று பெயரிடப்பட்டது. அது தற்போது திருகோணமலையில் இருந்து 650 கி.மீ தொலைவில் உள்ளது. இது மியான்மர் - பங்களாதேஸ் நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இதன் தாக்கம் சிறிலங்காவிலும் காணப்படுகிறது. அங்காங்கே சிறியளவிலான...

யாழ் இளையவர்களால் அன்னையர் தின பாடல் வெளியீடு

யாழ் இளையவர்களால் அன்னையர் தின பாடல் ஒன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மனதை உருக்கும் காட்சிகள் மற்றும் இளைமைக்காலத்தினை நினைவுக்கு கொண்டுவருகின்ற அழகிய காட்சிகள் அடங்கியதாக அழகிய கவி வரிகளுடன் இந்த பாடல் அமைந்துள்ளது. தினேஸ் ஏகாம்பரத்தின் பாடல்வரிகளிலும் இசையிலும் இயக்கத்திலும் வெளிவந்த இப்பாடலை நெடுந்தீவு யோகேஸ்,அம்மு,பிரின்ஸி ,தினேஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.ஒலிப்பதிவு சுதர்சனாலும் ஒளிப்பதிவு எஸ்.கௌரீசன் ,சஞ்சைய்...

தீர்வுத் திட்டம் தயாரிக்க சட்டவாளர்களின் மூவர் குழு; 2 வாரத்தில் வரைவு தயாரிக்கப்படும்.மன்னார் கூட்டத்தில் முடிவு!

தமிழர்களுக்கான ஆகக் குறைந்த தீர்வுத் திட்ட வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்காக மூவர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று இடம் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று மன்னார்...

த.தே.கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக முடிவுகள் ஏதுமில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான அவசரகலந்துரையாடல் ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இன்று காலை மன்னார் ஞானோதய மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான...

கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி.வடக்கு மக்களின் போராட்டம்

கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம் வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ளது அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம்  வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் நில ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...

எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்; மக்கள் போராட்டத்தில் குதிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,எம்.ஏ.சுமந்திரன்,சி.சிறீதரன்,தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வி்.ஆனந்த...

‘உதயன்’க்கு எதிராக டக்ளஸ் மற்றுமொரு வழக்குத் தாக்கல்!

“உதயன்” பத்திரிகைக்கு எதிராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான்காவதாக மற்றுமொரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலும், அவதூறுக்கு உள்ளாக்கும் நோக்கிலும்  ”உதயன்” பத்திரிகை பல தவறான செய்தி அறிக்கைகளை பிரசுரம் செய்துள்ளதென்றும்,  அத்தகைய மூன்று செய்திப் பிரசுரங்கள் தொடர்பாக மேற்படி பத்திரிகை நிறுவனத்துக்க எதிராக...

ஏனைய கட்சிகள் இணைந்து ‘த.தே.கூ’வை பதிவுசெய்ய தீர்மானம்!

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள்...

த.தே.கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் விஜயரட்ணம் எட்வின் டானியல் ஐ.தேக. உறுப்பினராக நியமனம் பெற்றுக் கொண்டார்.யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று(26) மாலை 5.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களிடையே சந்திப்பு...

கொழும்பு ஆனந்தாக்கல்லூரியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது யாழ் இந்துக் கல்லூரி

யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையிலான வி.ரீ.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக்கான இரண்டாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. இதனடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி இப் போட்டியில் வெற்றி கொண்டது. இப் போட்டி பற்றிய முழு விபரம்...

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் யாழ்ப்பாணத்தில் !

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது, 'அரசாங்கம் உடைத்து உடைத்து தேர்தலை நடத்தினால்...

மக்கள் முன்னணி நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது! மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் செயலகத்திற்கு முன்னால் இன்று 24.4.2013 நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல் வழங்கியதாக எமது இணையத்தளத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது எந்தப் போராட்டம் செய்வதானாலும் தமிழரசுக் கட்சி முன்னிலைப்படுதப்பட வேண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால்...
Loading posts...

All posts loaded

No more posts