Ad Widget

தொடர்ந்தும் வீழ்ந்துவரும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது, செவ்வாய் காலை நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 46 ஆயிரம் ரூபாய்க்கும் கீழிறங்கியுள்ளது.அமெரிக்க பொருளாதாரம், வலுவடைந்து உயரும் டாலர் மதிப்பீடு, சைப்ரஸ் பெருமளவில் தங்கத்தை விற்கக்கூடும் என்ற நிலையில் மிக அதிக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்திருந்தமை இவற்றின் ஒட்டுமொத்த விளைவாய் தங்கத்தின் விலை பன்னாட்டு சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துவருகிறது.இவ்வாறு வீழ்வதைக் கண்டு தங்கத்தில் முதலீடு செய்வோரும் அதை விற்கத் தொடங்க வீழ்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த சரிவு நடுத்தர மற்றும் ஏழை பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிக எண்ணிக்கையில் நடுத்தரவர்க்கத்தினர் நகைக்கடைகளுக்கு விரைந்து இயன்றவரை தங்க நகைகளை வாங்குவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. அதேநேரம் இப்போதே பன்னாட்டு சந்தையில் தங்கத்தின் விலை உற்பத்திச் செலவின் அளவே இருக்கிறது, விலை மேலும் கணிசமாகக் குறையுமானால் தங்கச் சுரங்கப் பணிகளே ஸ்தம்பித்துவிடக்கூடிய வாய்ப்பிருக்கிறது, அந்நிலையில் விலை வீழ்ச்சி நிறுத்தப்பட்டுவிடும் எனவும் கருதப்படுகிறது.

Related Posts