- Thursday
- August 20th, 2026
யாழ்.குடாநாட்டில் பெண்கள், சிறுவர்களுடன் இயங்கும் இல்லங்கள், நிறுவனங்கள் எவற்றிலும் ஆண்களைப் பணிக்கு அமர்த்த முடியாது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.கைதடியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் துஷ்பிரயோகம் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவற்றைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன...
தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது, செவ்வாய் காலை நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 46 ஆயிரம் ரூபாய்க்கும் கீழிறங்கியுள்ளது.அமெரிக்க பொருளாதாரம், வலுவடைந்து உயரும் டாலர் மதிப்பீடு, சைப்ரஸ் பெருமளவில் தங்கத்தை விற்கக்கூடும் என்ற நிலையில் மிக அதிக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்திருந்தமை இவற்றின் ஒட்டுமொத்த விளைவாய் தங்கத்தின் விலை பன்னாட்டு சந்தைகளில் பெரும்...
இலங்கையின் தலைநகர் கொழும்பில் தும்முள்ள சந்தியில் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் தலைமை அலுபலகத்துக்கு முன்பாக, அவர்களது கொள்கைகளை கண்டித்து அமைதி எதிர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்த முயன்ற ‘’பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு’’ என்னும் ஃபேஸ்புக் குழு ஒன்றின் உறுப்பினர்களை பொலிஸார் கலைத்ததாகவும், பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுபவர்கள்...
கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை நிராகரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போரின் இறுதிநாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சூசையும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசியபோதே சரத் பொன்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,போரின் இறுதி நாளில் பிரபாகரன் மற்றும் 100 போராளிகளுடன்...
பிறக்கும் விஜய தமிழ்ப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 13ஆம் திகதி சனிக்கிழமை முன்னிரவு 11.58 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிக்கிழமை பின்னிரவு 1.29 க்கும் பிறக்கிறது.வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி அன்று இரவு 7.58 மணி முதல் அதிகாலை 3.58 வரை விஷ¤ புண்ணிய காலம் என்றும், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அன்று இரவு 9.29...
யாழ் செயலகத்தில் இயங்கிய ஆட்பதிவுத்திணைக்கள அலுவலகம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி முதல் வவுனியாவுக்கு மாற்றப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக செய்திகள் கிடைத்துள்ளது.இலங்கை ஆட்பத்திவுத்திணைக்களத்தின் உப அலுவலகம் இதுவரை யாழ் செயலகத்தில் இயங்கிவந்தது. அதன் மூலம் யாழ்மாவட்ட மக்களின் சாதாரண முறையிலான ஆட்பத்திவு விண்ணப்பங்கள் பிரதேசசெயலகங்களுக்கூடாக பெறப்பட்டு கையாளப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒருமாதத்துக்கு சுமார் 1600 விண்ணப்பங்கள்...
‘நாம் இன்று பயிரிடுவோம் நாளை பயன் பெறுவோம்’ தொனிப்பொருளுக்கு அமைய கருமங்களை ஆரம்பிக்கும் புத்தாண்டின் சுபவேளையில் நான்கு மில்லியன் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் - 2013 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. விவசாய ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந் நிகழ்வில் கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்கள் தலைமைதாங்கினார்.'பயன்மிக்க மரங்களை நடுவதன் மூலம் மாணவர்கள்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலில் தமது நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற தமிழ் மக்களை "இங்கே வர வேண்டாம் ஓடிப் போங்கள்'' என்றவாறு இராணுவத்தினர் விரட்டியடித்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். நாயாறுப் பாலத்துக்கும் கொக்குத்தொடு வாய்க்கும் இடையிலுள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலுக்கு பங்குனி உற்சவத்தை...
யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் ”நது ஓய்வு விடுதி” என்ற பெயரில் இயங்கிவந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்று நேற்று(28)முற்றுகையிடப்பட்டுள்ளது.யாழ். பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில் பெண்கள்...
'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளா?' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி...
உதயன் ஒன்லைன் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரன் (வயது29) நேற்று அதிகாலை வீட்டுக்கிணற்றில் தவறி வீழ்ந்து அகாலமரணமானார்.இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் பலவீனமுற்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மயூதரனின் இறுதிக் கிரியைகள் இன்று தற்காலிக இல்லமான பழைய தபாற்கந்தோர் வீதி, லீலாவத்தை தெல்லிப்பளையில் நடைபெற்றது. மயூரதன் உதயன் இணையத்தள செய்தியாளராக கடந்த...
வடக்கு மாகாணம் என ஒரு மாகாணம் இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக இன்னமும் அங்கீகாரம் பெறாத காரணத்தினால், அதற்கு தேர்தல் நடாத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நடாத்துவதற்காக கிழக்கு மாகாணம் மாத்திரமே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது,...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது. அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் பிரேரணைக்கு ஆதரவாக ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் வாக்களித்ததுடன் தாய்லாந்து, பாகிஸ்தான், வெனிசுலா, இந்தோனேசியா , சவுதி அரேபியா ,குவைத் ,ஈக்வடோர், கட்டார், மாலைதீவுகள்...
யாழ்ப்பாணத்தில் பிறவுன் வீதியில் அமைந்துள்ள மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூவர் நேற்று முன்தினம் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கொழும்பில் வைத்து குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இங்கு பணியாற்றும் மேலும் ஒரு பணியாளரை கைது...
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்த்து இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்று வருகின்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகளுக்கு எதிரான கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் தாங்கியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் எதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்று கூட தெரியாமல் பலர் கலந்து...
யாழ்ப்பாணம் மத்தியகல்லூரிக்கும் பரியோவான் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற வடக்கின் மாபெரும் துடுப்பாட்டப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர நிறைவின்போது யாழ்.மத்திய கல்லூரி அணியினர் 7 விக்கெட்டுக்களினை இழந்து 126 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர்.இரண்டாவது நாள் ஆட்டத்தினை தொடர்ந்தமத்திய கல்லூரி அணியினர் துடுப்பாட்டத்தில் சௌமிதரன் யூலிய ஸ்கனிஸ்ரன் ஆகியோரின் இணைப்பாட்டத்தின் மூலம் நான்கு விக்கெட்டுக்களிற்க 40 ஓட்டத்தினை...
ICTA நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி சிறிய நடுத்தர வகை தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து வடமாகாணத்திற்காக யாழ்ப்பாணத்தில் கண்காட்சி ஒன்றினை நடாத்த உள்ளது. அதில் உள்நாட்டு மென்பொருள் அபிவிருத்தி மற்றும் இணையத்தள அபிவிருத்தி மல்ரிமீடியா துறை சார்ந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது சேவைகள் உற்பத்திகளை காட்சிப்படுத்த இலவச வசதி செய்து...
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணிக்கும், கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிக்குமிடையிலான வருடாந்த மாபெரும் துடுப்பாட்ட போட்டி இன்று 12.3.2013 யாழ்.இந்து கல்லுாரி மைதானத்தில் ஆரம்பமாகியது. மேலதிக விபரங்களை யாழ் இந்துக்கல்லூரி இணையத்தளமான www.jhc.lk ல் காணலாம்.
எதிர்வரும் 9ம் திகதி சனிக்கிழமை யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நுட்பம் - இலங்கை தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ”எடிசலாற் இலங்கை” நிறுவனத்தின் அனுசரணையில் ”நுட்பம் மாநாடு -2013 ” என்ற தலைப்பில் தொழில்நுட்ப மாநாடு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. பிரதான அனுசரணையாளர்களாக ”சிறீலங்கா ரெலிகொம்” மற்றும் ”கரிகணன் பிறண்டேர்ஸ்” ஆகிய நிறுவனங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts



