Ad Widget

கந்தன் ஆலயத்தின் உள்ளே காலணியுடன் காவல்துறை

வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்மண்டபத்தில் அரசியல்வாதி ஒருவரின் பாதுகாப்புக்காக வந்த ஆயுதம் தரித்த சிறப்பு காவல்துறையினர் காலணியுடன் பிரவேசித்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை ஊடகவியலாளர்களின் கமெராவில் சிக்கி நியு யப்னா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. காலணியுடன் சர்வசாதாரணமாக காணப்படும் அந்த காவல்துறையினரின் செய்கை இந்துக்களின் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரணமாக மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதே தெய்வ குற்றமாக ஆலய நிர்வாகிகளினால் கருதப்படும் இந்த ஆலயத்தில் காவல்துறையினர் கண்ணியமற்றமுறையில் காலணியுடன் காணப்படுகின்றமை கவலைக்குரியது கண்டணத்திற்குரியது என முருக பக்தர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.

புனித பிரதேசங்கள் பலவற்றில் சாதாரண பொதுமக்கள் கவனியாமல் காலணிகளுடன் சென்றுவிட்டாலே தாக்கும் பாதுகாப்பு தரப்பினர் இது விடயத்தில் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது அவர்கள் சார்ந்த திணைக்களத்திற்கே அவமானம் தேடித்தருவதாக அமைந்திருக்கிறது.மற்ற மதத்தினரை அவமதிக்கும் செயலாகவும் இது அமைந்திருக்கின்றது. இருப்பினும் காணப்படும் படத்தில் அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரி வெளியில் நிற்பதும் குறிப்பிடத்தக்கது

இங்கு வருகைதரும் மிகப்பெரிய அதிகாரிகள் அமைச்சர்கள் கூட மேலாடை கழற்றி ஆசாரத்துடன் செல்வது வழமை இருப்பினும் காவல்துறை சம்பந்தப்பட்ட இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

nallur2

[நன்றி :படங்கள் – NEWJAFFNA]

Related Posts