Ad Widget

ராமநாதனை கைது செய்யாவிடின் விலகுவோம்; நான்கு வேட்பாளர்கள் சூளுரை!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையான ராமநாதனை கைது செய்யாவிடின் தாங்கள் வேட்பாளர் நியமனத்தை மீளப்பெற்று தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளபோவதாக கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் நால்வர் சூளுரைத்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துதெரிவித்த போதே அந்த நான்குவேட்பாளர்களும் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், வேட்பாளர்களான குமார் சர்வானந்தன், முடியப்பு ரெமிடியாஸ், எஸ். பொன்னம்பலம் மற்றும்; அகிலதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர்களே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாங்கள் ஆயுத கலாசாரத்தை விரும்பவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் ஆயுத கலாசாரம் தலைத்தூக்கியுள்ளது. வேட்பாளர் அங்கஜனின் தந்தையான ராமநாதனுக்கு ஆயுதம் வழங்கியது யாரென்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கேட்டிக்கின்றோம். இந்த சம்பவம் தொடர்பில் நவடிக்கை எடுப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்.

சாவக்கச்சேரியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுவிட்டு நீதிமன்றத்திற்கும் செல்லவிருக்கின்றோம்.

வேட்பாளர் அங்கஜன் ஆயுதம் பயன்படுத்தியது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது மட்டுமன்றி காலஅவகாசமும் கொடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

Related Posts