Ad Widget

இசைப்பரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை: ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி கோரிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஊடகவியலாளராக அறியப்பட்ட இசைப்பிரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பியினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்;ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் சார்பாக ஈ.பி.டி.பி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்ற உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர். இந்த நிலையில் சனல் 4 தொலைக்காட்சி போர்க் குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்ல உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை அதிர்சிக்குள்ளாகியுள்ளது.

அத்தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் இராணுவத்தினர் கைது செய்த காட்சியை ஒளிபரப்பு செய்துள்ளமை தமிழ் மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது. நம்பிக்கைகளை தகர்ந்து போகச் செய்துள்ளது. மனித நேயமுள்ளவர்களை உலுப்பியுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் இசைப்பிரியா கைது செய்யப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பதான செய்திகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்தப்பட்டு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்படின் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்ட வேண்டும்.

அதுவே இறுதி யுத்தம் தொடர்பாக தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் படுகொலைகள் தொடர்பான அச்சங்களும் சந்தேகளுக்கும் விடைகாண்பதாக அமையும். இதனால் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் நியாயமும் பரிகாரங்களும் காணப்பட வேண்டும்.

ஆகவே எமது கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் உண்மையை வெளி உலகிற்கு தெரியப்படுத்துவார் என எதிர்பார்க்னிள்றோம்” என குறித்த கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts