Ad Widget

அனந்தி, சிவாஜிலிங்கம் நடுநிலை:2015 வடமாகாணசபை ”பட்ஜெட்” நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான் வாக்கெடுப்பின் போது  தாங்கள் நடுநிலை வகிக்கப்போவதாக ஆளுங்கட்சி உறுப்பினர்களாக அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்ததையடுத்து, மற்றைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு-செலவுத்திட்டம் நிறைவேறியது.

வடமாகாண சபை வரவு – செலவுத்திட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தாங்கள் நடுநிலை வகிப்பதாக இருவரும் தெரிவித்தனர்.

வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19)இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் அலுவலகம், முதலமைச்சர், 4 அமைச்சுக்கள் மற்றும் பேரவை செயலகம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆளுநருக்கு தனிப்பட்ட ரீதியில் ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் ரூபாய் நிதியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச சபைக்கு வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட நிதியும் நிறுத்தி வைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மிகுதி ஒதுக்கப்பட்ட நிதியை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Related Posts