யாழில் கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிட்ட கொழும்பு சுகாதார அதிகாரிகள்!

யாழ்.சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்றைய தினம் குறித்த பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், நீர் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர். இன்றைய தினம்  காலையிலேயே உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் இடங்களிலிருந்து நீர் மாதிரிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்....

மயிலிட்டி பகுதியிலிருந்த கோயில்கள் இடிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியிலிருந்த எங்கள் கோயில்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் குடியிருந்த வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன என மயிலிட்டி மக்கள் பிரதிநிதி ஒருவர் கவலை தெரிவித்தார். யாழ். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 'இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள்' கலந்துரையாடல் நாவலர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை(04) இடம்பெற்றபோது, அவர்...
Ad Widget

கழிவொயில் பிரச்சனை தொடர்பில் தீர்வு கேட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் முன்றலில் வியாழக்கிழமை (05) நடத்தினார். ஆர்ப்பாட்டக்காரர்கள், 'எண்ணெய் கசிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தரவேண்டும்', 'எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அனர்த்த பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும்', 'மக்களை முட்டாளாக்காதே',...

வித்தியின் வழிகாட்டலில் வடக்கில் புதிய அரசியல் கட்சி மலரும்

தமிழ்த் தேசியக் கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக முன்னாள் ‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், மலரும் இணையத்தள உடக ஆசிரியரும் தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவருமான நடேசபிள்ளை வித்தியாதரன் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியொன்று வடக்கில் மலர இருப்பதாக நம்பகரமாகத் தெரியவருகிறது. முன்னாள் போராளிகளாக இருந்து தமிழ்த் தேசிய உரிமைகளுக்காகப்...

தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு: சம்பந்தர் விளக்கம்

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அவ்விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக...

புதிய பஸ் கட்டணங்களின் முழு விவரம்

இராணுவத்தினரிடமிருந்து ஒரு தொகுதி காணிகள் விரைவில் விடுவிப்பு!

உயர்பாதுகாப்பு வலையமாக கையகப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களுடைய காணிகளில் ஒரு தொகுதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு யாழ்.அரசாங்க அதிபராக இருந்து திருமதி இமெல்டா சுகுமார் உச்ச நீதிமன்றத்தில் அனுப்பிவைத்த சிபார்சின் அடிப்படையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 கிரம சேவகர்...

நொதர்ன் பவர் நிறுவனத்தை மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை மின்சார சபையின் நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம்  உத்தரவினை பிறப்பித்துள்ளது.   பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்   நொதர்ன் பவர் நிறுவனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைப்பதுடன் மறு அறிவித்தல் வரும்வரை...

முகப்புத்தகம் முடங்கியது

உலகின் முதல்தர  சமூக வலைத்தளமான முகப்புத்தகம் என்றழைக்கப்படும் Facebook தளம் சற்றுமுன்னர் முடங்கியது ”. "Sorry, something went wrong. We're working on getting this fixed as soon as we can."  என்ற செய்தி வருவதாக  பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். முகப்புத்தகம் 1.32 பில்லியன் மாதாந்த பயனாளர்களை கொண்டமை குறிப்பித்தக்கது.

பந்து எடுக்க சென்ற இளைஞன் இராணுவத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பு

விளையாடிக் கொண்டிருந்தவேளை இராணுவ முகாமிற்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்றவரை இராணுவத்தினர் கடுமையாக தாக்கியதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார்.   சம்பவம் குறித்து தெரியவருவதாவது,    வல்வெட்டித்துறை எள்ளங்குளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை இராணுவ முகாமுக்குள் பந்து சென்றுவிட்டது. அதனை எடுப்பதற்கு சென்ற...

தமிழரசுக் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் செத்துவிடவில்லை என்ற எனது நம்பிக்கை பொய்த்துவிட்டது – அனந்தி

மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் தமிழரசுக் கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கிலும் கட்சியின் முடிவென்ற பெயரில் இம்மாதம் 3ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முடிவுக்கு மாறாக, மைத்திரிபால சிறிசேனவுக்கு வெளிப்படையாக...

180 நாட்கள் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நிரந்தரப்படுத்துவதில் வடக்கு அதிகாரிகள் அசமந்தம்!

தற்காலிக, அமைய ( நாளாந்த),பதில் கடமை, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல்  தொடர்பில் 2014.11.12 ம் திகதிய அரசாங்க சுற்றறிக்கை யின் படி (http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2014/T/25_2014(i)(t).pdf)  சகல திணைக்களங்கள் மாகாணசபைகள் கூட்டுத்தாபனங்களில் இருந்து விபரங்கள் கோரப்பட்டிருந்த போதிலும் வடமாகாண அரச நிறுவனங்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்த...

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது.

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. 92 ஒக்ரின் பெற்றோல் 117 ரூபாவாகவும் , 95 ஒக்ரின் பெற்றோல் 128 ரூபாவாகவும், டீசல் 95 ரூபாவாகவும், மண்ணெண்ணை 65 ரூபாவாகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும்...

பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன்சேகா  மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தனது வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகளை சரத் பொன்சேகா, 2010ஆம் ஆண்டு இழந்தார். இராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பை 2011ஆம் ஆண்டு...

அமைச்சர், இராஜாங்க அமைச்சர், 4 பிரதியமைச்சர்களும் பதவியேற்பு!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சர்: அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிம் இராஜாங்க அமைச்சர் சுகாதார இராஜாங்க அமைச்சர்: மொஹமட் தம்பி ஹசன் அலி பிரதியமைச்சர்கள் சமூக சேவைகள், நலன்புரி...

பெரும்பான்மை பலம் சுதந்திர கூட்டமைப்பிற்கு உண்டு என்பதனை ஐ.தே.க புரிந்து செயற்பட வேண்டும்: ரதன தேரர்

நாடாளுமன்றின் பெரும்பான்மை பலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு உண்டு என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணகைளை தடுத்து நிறுத்த...

அரசியலமைப்பு திருத்தம் குறித்த சட்ட வரைவு 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: நீதி அமைச்சர்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான சட்ட வரைவுத் திட்டம் எதிர்வரும் 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட வரைவு இன்னமும் இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து 19ம் திருத்தச் சட்டத்தை...

பழைய முறைப்படி இனி புலமைப்பரிசில் பரீட்சை!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை பழைய முறைப்படி நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது இதனை கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் பழைய முறைப்படி இரண்டு வினாத்தாள்கள் கொண்டதாக பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசில் கல்வி அமைச்சராக இருந்த பந்துல குணவர்த்தன ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையின்...

பிரதி அமைச்சர் விஜயகலா வேண்டுகோளில் காணி சுவீகரிப்பை நிறுத்தினார் ஜனாதிபதி!

பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆனைக்கோட்டை கூழாவியடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது எனினும் நேற்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் காணி சுவீகரிப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெளிவுபடுத்தியதையடுத்து...

இனவாதத்தை மறந்து பிரச்சினை தீர்க்க பிரதமர் அழைப்பு: 26ல் பட்ஜெட்!

இனவாதத்தை கைவிட்டு அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஐக்கியமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு இன்று (20) இடம்பெற்ற வேளை விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். எதிர்வரும் 26ம் திகதி...
Loading posts...

All posts loaded

No more posts