போக்குவரத்து வரம்பு மீறல் அபராதம் விரைவில் அமுலுக்கு வரும்

போக்குவர்த்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படவுள்ளதாக உத்தேசி்க்கப்பட்ட 25,000 ரூபா அபராதம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார். மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட...

கிணற்றில் வீழ்ந்து தாயும் மகனும் உயிரிழப்பு

வவுனியா பன்றிக்கெய்தகுளம் கிராமத்திலுள்ள கிணற்றில் விழுந்து தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். சதீஷ்வரன் சுதாஜினி (வயது – 30) என்ற தாயும் சதீஷ்வரன் டினோஷன் (வயது – 7) என்ற மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் தாய் இன்று (திங்கட்கிழமை) காலை வீட்டிலிருந்து வெளியே சென்றபோது தாயும் மகனும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் திரும்பி வந்தபோது இருவரையும்...
Ad Widget

முன்னாள் போராளிகள் போராட்டம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி இரணைமடு சந்தியில் ஒன்று திரண்டு வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளாகிய தம்மை விடுதலை செய்யும்போது வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என உறுதியளித்த போதிலும், இன்றுவரை தாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமக்கு வேலை...

ஐந்து மாணவர் படுகொலை நடந்து இன்றுடன் ஒரு தசாப்தம் நிறைவு!

தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இன்றுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 2006 ஜனவரி 2 ஆம் நாள் திருகோணமலை,...

முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

சாவகச்சேரியைச் சேர்ந்த இனியவன் என்று அழைக்கப்படும் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தர்மசேனா ரிசீகரன் என்ற 34 வயதான 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினராக செயற்படும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

மேலும் இரு இராஜாங்க அமைச்சர்கள் இராஜினாமா?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிப்போருக்கு இடையிலான தீர்க்கமானதொரு கலந்துரையாடல், இம்மாதம் இரண்டாவது வார காலப்பகுதியில் இடம்பெறவுள்ளதாக, அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே, இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பவரொருவர் தெரிவிக்கின்றார். இந்தக் கலந்துரையாடலின் போதே, அரசாங்கத்தை விட்டு...

மஹிந்த விரும்பியதை செய்யலாம்!! ஆனால் நானே பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் உண்டு எனவும், எதுஎவ்வாறு இருப்பினும் தானே நாட்டின் பிரதமர் எனவும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிறந்திருக்கும் புதுவருடத்தில் முதன்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அரலி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது, ஊடவியலாளர்களை சந்தித்த வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதன்போது, 2017ம்...

எஸ்-3 படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்க்கும்: ஹரி

திரைப்பட இயக்குனர் ஹரி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிங்கம் படத்தின் 3-வது பாகம் “எஸ்-3“ என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள இந்த படத்தில் சிங்கம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடித்து...

அச்சமின்றி, அப்பா ஒரே கதை?

ராஜபாண்டி இயக்கத்தில் விஜய்வசந்த் நடித்துள்ள அச்சமின்றி படம் டிசம்பர் 30 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அச்சமின்றி படத்தின் கதையும் சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படத்தின் கதையும் ஒன்றுபோல் உள்ளது. குறிப்பாக நாமக்கல் பள்ளிகளில் நடைபெறும் கொடுமை இரண்டு படங்களிலும் இடம்பெற்றுள்ளது. அச்சமின்றி படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படம்...

பாட்ஷா, கபாலியை மிஞ்சும் ரஜினியின் அடுத்த கேங்ஸ்டர் படம்!

ரஜினியின் கேரியில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். வசூல்ரீதியாக மட்டுமின்றி, ரஜினிக்கும், அவரது ரசிகர் களுக்கும் பெரிய திருப்தியை கொடுத்த படம். அதனால்தான் இப்போது வரை தான் நடித்த படங்களில் பிடித்த முதல் படமாக பாட்ஷாவை குறிப்பிட்டு வருகிறார் ரஜினி. மேலும், அந்த படம் பாணியில் அதன்பிறகு பாட்ஷா-2 படத்தை இயக்க...

பொது இடங்களில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த தடை

பொதுச்சொத்துக்கள் பொது இடங்களில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் வீதிகளின் ஓரங்களில் நிழல்தரும் மரங்களில் விளம்பரத் தகடுகளை ஆணிகளைப் பாவித்துப் பொருத்துதல் என்பன யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (01.01.2017) முதல் தடைசெய்யப்படவுள்ளதாக ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். சுவரொட்டிகளை விளம்பர நோக்கத்துக்காகவும் அறிவுறுத்தல் நோக்கத்துக்காகவும் காட்சிப்படுத்தவிரும்புவோர் இரண்டுக்கு மேற்படாத சுவடிரொட்டிகளை யாழ்.மாநகரப் பகுதிகளில் நிறுவியுள்ள விளம்பரப்...

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் யாழில்

யாழ் போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் 01.01.2017அன்று நடைபெற்றது. இம் மருத்துவ முகாமில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிக்குக் கீழ் செயலிழந்தவர்கள் பயன்பெற்றனர். யுத்தத்தினாலும் விபத்துக்களினாலும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது...

அரிசி விலை 20 ரூபாவினால் குறைவு?

சுங்க வரி இல்லாமல் நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், தற்பொழுது காணப்படும் அரிசியின் விலையிலிருந்து 20 ரூபாய் குறைவாக நுகர்வோருக்கு வழங்க முடியும் என நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசி, சுங்க வரி இல்லாமல் இறக்குமதி...

முல்லைத்தீவில் காந்தி சிலை உடைக்கப்பட்டமைக்கு மாவை கண்டனம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில்...

கூட்டமைப்பும், சர்வதேசமும் சுயதேவைக்கு ”முள்ளிவாய்க்கால்” என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற் பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்கு பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய...

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் மாற்றம்!

2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாகவும், அதன்படி பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் கடந்த நவம்பர் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது....

லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்பு!

பொதுமக்களுக்கு கூடுதலான நன்மைகளை வழங்கும் பொருட்டு நேற்றைய தினத்திலிருந்து லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் லொத்தர் சீட்டுக்களின் விலை தொடர்பாக இடம்பெற்ற ஊடவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக பல்வேறு பிரதேசங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று...

எனது கணவனை மன நோயாளியாக்கியே காணாமல் போகச் செய்தனர்!

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என புவனேந்திரராசா இராசேஸ்வரி என்ற குடும்பத் தலைவி கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தினரின் அறிவிப்புக்கேற்ப சரணடைந்த தனது கணவனை மனநோயாளியாக்கி காணாமல் போகச் செய்துள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சி – கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான அருணாச்சலம்...

யாழ். பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள்

வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி கந்தையா தியாகராஜா, சனிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில், நெல்லியடி,...

எமது கிராமமே ‘எமக்கு வேண்டும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்’

“கேப்பாப்புலவுக்கு வருகை தரும் ஜனாதிபதியிடம் இராணுவ முகாம்களை அகற்றி கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” என கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர். “இடம்பெயர்ந்த போது, இராணுவத்தினர் எமது கிராமத்தினை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ முகாம்களை எமது பூர்வீக நிலத்தில் அமைத்தனர். எம்மை நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வந்த இராணுவத்தினர், 2012ஆம் ஆண்டில்...
Loading posts...

All posts loaded

No more posts