‘பொருத்து வீட்டுத்திட்டத்தை நிராகரியுங்கள்’

பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், உயர்மட்ட...

14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

1998ஆம் அச்சுவேலி சிறுப்பிட்டி பகுதியில் சிவிலியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 14 இராணுவத்தினரின் விளக்கமறியலை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார். 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி, சரஸ்வதி சௌந்தரராஜன்,...
Ad Widget

பதில் முதல்வராக பொ.ஐங்கரநேசன் சத்தியப்பிரமாணம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனிப்பட்ட விஐயமாக லண்டன் மற்றும் கனடா நாடுகளுக்கு செல்வதன் அடிப்படையில் அவரின் பதவியினை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். குறித்த சத்தியப்பிரமாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது....

இன்று முதல் விசேட போக்குவரத்து நடைமுறை

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக விசேட போக்குவர்த்து நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை விசேட போக்குவரத்து அமுல்படுத்தப்படும்.

டேவிட் வார்னர் சாதனை

கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். இன்று ( செவாய்க்கிழமை) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இடது கை தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 78 பந்துகளில் சதமடித்து இந்த...

மேலும் 50 மருந்து பொருட்களின் விலைகள் குறைப்பு!

50 மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என மருந்துப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில், மருந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களுக்கும் அரச மருத்துவ தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.48 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகள் கடந்த ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தால் குறைக்கப்பட்டன.இந்த...

‘காதலில் சிம்புவும் தனுஷும்’?

தற்போது கோலிவுட்டில், புதுமுகங்கள் நடிப்பில் ‘காதலில் சிம்புவும் தனுசும்‘ -என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் லோகேஷ், ராஜா என்ற இரு புதுமுங்கள் சிம்பு, தனுஷ் பெயரில் நடிக்கின்றனர். மேலும், சிம்பு மற்றும் தனுஷின் அதிரடி பஞ்ச் டயலாக்குகளையும் இப்படத்தில் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு, படத்தில் சிம்புவின் ‘’கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி...

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இசையமைப்பாளர் யார்?

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசையமைப்பாளர் யார் எனும் கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து கவுதம் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா’ போஸ்டர்கள், டீசர் வெளியான போதிலும், இப்படத்தின் இசையமைப்பாளர் யார்...

வசனகர்த்தாவாக அவதாரமெடுக்கப் போகும் நடிகர் மாதவன்

தான் நடிக்க உள்ள புதிய படத்தின் ஹிந்திப் பதிப்பிற்கு நடிகர் மாதவன் வசனம் எழுத உள்ளார். இறுதிச் சுற்று படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சுற்றுக்கு கிளம்பியுள்ளார் நடிகர் மாதவன். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து ’விக்ரம்-வேதா’ என்ற படத்தில் ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ போலிஸ்காரராக மாதவன் நடித்து வருகிறார். விக்ரம்-வேதா படத்தை...

வழிநடத்தல் குழுவிலிருந்து விலகுவது சாணக்யமானதல்ல

புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில் எதிர்கால அரசியல் திட்டமிடல்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடையபெயரைக் குறிப்பிட்டு இவ்விருவரும் அரசியலமைப்பை உருவாக்கும் பிரதான வழிப்படுத்துதல் குழுவிலிருந்து இராஜனாமா செய்யவேண்டுமென கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களே அறிக்கைகளை வெளியிடுவது அவசரப்படும் காரியமாகும். அது...

எதிர்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் நடந்த புது வருட நிகழ்வு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின்  அலுவலகத்தில் புதுவருட நிகழ்வுகள் நடைபெற்றது.

மதுபோதையில் வந்த இராணுவ வீரர்கள் முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல்

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் ( 01) காலை 10.30மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி மீது மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் காலை மூன்று முறிப்பு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் அப்பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி...

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்

இந்த வருடம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளினதும் மரபணு தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் இதில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக பிரஜைகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளதாகவும் இதற்கு தகுதி பெறுவோரின் எண்ணிக்கை...

மாவீரன் பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவில் சிலை வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்று (திங்கட்கிழமை) மாலை திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த சிலையின் தோற்றம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவந்திருந்த நிலையில், சர்ச்சைகளை கடந்து குறித்த சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில்...

பொலிஸாரை தகாத வார்த்தையால் திட்டிய இளைஞர் கைது

பொலிஸாரை தகாத வார்த்தையால் பேசிய இளைஞரை யாழ். பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைதுசெய்யப்பட்ட இளைஞர் நேற்று (திங்கட்கிழமை) யாழ். பஸ்தியன் சந்திப்பகுதியில் இளைஞர்களுடன் நின்றுள்ளார். அப்போது, சிங்கள மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த...

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசாங்கம் இணக்கம்!

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 53 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் நூற்றிற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் முதற் தடவையாக சிறீலங்கா அரசாங்கம் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள்...

தரம் குறைந்த தலைக்கவசங்களுக்கான தடை

எஸ்.எல்.எஸ் (SLS) தரச் சான்றிதழற்றதும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் ​(​ஹெல்மட்) பயன்படுத்துவதற்கு, இவ்வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதென்று, போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், இன்று அறிவித்தது. அதனால், தலைக்கவசங்களைக் கொள்வனவு செய்யும் போது, அவதானமாகக் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களிடம், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், அறிவுறை வழங்கியுள்ளது. தற்போது இடம்பெறுகின்ற வாகன விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகள்...

வடமாகாண பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு சிங்கள ஆசிரியர்கள் நியமனம்!

வடமாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று (2) வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. நேற்று முற்பகல் 11 மணியளவில் இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, சிறப்பு...

நுண் கடன் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை

நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கணவன்...

தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாது ஜனாதிபதி யாழ் வருவது கடினம்

தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாமல் ஜனாதிபதி செயற்பட்டால், யாழ்ப்பாணத்திற்கு வருவது இதுவே கடைசி தருணம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (2) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எம்மிடம் உள்ள இறைமையினை கையளிக்கப் போகின்றோமா இல்லையா என்பதே கேள்வி. மிகவும் நம்பிக்கைக்குரிய...
Loading posts...

All posts loaded

No more posts