- Sunday
- May 17th, 2026
யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. 77 மீனவர்களும் எதிர்வரும் 31-ந் திகதி காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர். எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 92 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார்...
வடமாகாண மக்களின் உற்பத்திகளை வெளிநாட்டில் சந்தைப்படுத்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜேர்மனிய தூதுவர் ஜோன் ரோக்டியிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவருக்கும் இடையிலான விசேட குழுவினருக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசேட சந்திப்பு இடம்பெற்றது. முதலமைச்சரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
நாட்டில் உள்ள யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது வழக்கத்திற்கு மாறான ஒன்று என வன பாதுகாப்பு ஆய்வு மத்திய தலைவரான பேராசிரியர் பிரித்திராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 12 மற்றும் 23ஆம் திகதியில் கிழக்கு கடலில் நீந்திச் சென்ற மூன்று யானைகளை கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும்...
வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு, தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, "வடக்கு...
காரைநகர் கடற்பரப்பில் நேற்று(28) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவிக்கின்றனர் குறித்த ஆண் யார் என அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் உள்ளது. குறித்த சடலத்தை அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணையினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை வடிவமைத்துள்ளார் நுவரெலியா இளைஞர் ஒருவர். நுவரெலியா களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார என்ற நபரே இவ்வாறு தானியிங்கி முச்சக்கரவண்டியை கண்டுபிடித்தவராவர். இவர் முச்சக்கரவண்டியை ரிமோட் கொண்ரோல் ஊடாக இயக்கக் கூடிய வகையில் 5 நாட்களில் இதனை தயாரித்துள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும். இயந்திரவியல்...
இலங்கை கடற்படை வரலாற்றில் முதலாவது தொழில்நுட்பக் கப்பலை இந்தியாவிடம் இருந்து இலங்கை கொள்வனவு செய்துள்ளது. இதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு குறித்த கப்பலை நிர்மாணிப்பதற்காக இலங்கையால் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது....
வடக்கு மாகாணசபை மூன்றரை வருடங்களைக் கடந்துவிட்ட போதும் ஊழல்கள் செய்ததைத் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை. பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளதே தவிர வினைத்திறனாகச் செயற்படல்லை என்று சிலரால் மாகாணசபையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் மக்கள் மத்தியிலும் இதே கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். வடமாகாண சபை வினைத்திறன் அற்றதென்று இவ்வாறு விமர்சிப்பவர்கள் திட்டமிட்டு அரசியல் உள்நோக்கத்துடனேயே அதனைச் செய்து...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமாக செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மருத்துவ தேவை உடையவர்களை...
எதிர்பாராத விதமாக நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் தடைப்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு ஓர் நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளது. ஒரு பகுதியில் அதிகளவான மின்சாரம் தேவைப்படும் போது அங்கு மின்சார தடை ஏற்படும் என மின்சாரசபையின்...
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தம் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் பயிர்செய்கை நிலங்களிற்கு நீர் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரணைமடு திட்ட விவசாயிகள் இணைந்து குளத்தின் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தி நீரை...
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயத்தை தாம் வலியுறுத்தியதாக முன்னணியின் தவிசாளர் தெரிவித்தார். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன்...
ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ”ராமன் மக்சாசே” விருது இலங்கைத் தமிழ்ப் பெண் கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது. 82 வயதுடைய இவர் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளார். இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் அரச...
மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணைக்கு அமைவாக மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்கப்பட்டுள்ளதாக, சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் திருமதி யு.யசோதா அறிவித்தார். “மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணையின் பிரகாரம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெறுநர்களாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் பதிவாளர், இந்துக் குருமார் ஒன்றியத்தின் 2 மூத்த குருக்கள், யாழ்ப்பாண மேலதிக...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கடற்படை அதிகாரி பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரவிராஜின் கொலை வழக்கை மீள விசாரிக்குமாறு கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,...
இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அனைத்து துறைகளிலும் தடுமாறும் இலங்கை அணி பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, நேற்றய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிவருகின்றுது. காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான நேற்று...
வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...
வடமாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 48 இலட்சம் ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 21 இலட்சம் ரூபாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 இலட்சம் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாக...
அத்தியாவசிய சேவைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அத்தியாவசிய மக்கள் சேவைகள் சட்டத்தின் கீழான ஏற்பாடுகள் மீதான விவாதத்தில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சேவைகளை முடக்குவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது. கூட்டு எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் கும்பல், வேலை...
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு மக்களை கேட்டுள்ளது. நீர் ஏந்து பிரதேசங்களில் பொதியளவு மழைபெய்யாததினால் மின் உற்பத்திக்கான நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. தொடர்ச்சியான மின்விநியோகத்திற்காக மக்களின் ஒத்துழைப்புகள் தேவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்படும் மாலை 6.00 மணி முதல்...
Loading posts...
All posts loaded
No more posts
