Ad Widget

ஜேர்மனிய தூதுவருக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

வடமாகாண மக்களின் உற்பத்திகளை வெளிநாட்டில் சந்தைப்படுத்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜேர்மனிய தூதுவர் ஜோன் ரோக்டியிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கும், இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவருக்கும் இடையிலான விசேட குழுவினருக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசேட சந்திப்பு இடம்பெற்றது.

முதலமைச்சரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்பயிற்சிகள் மிக திறமையான முறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளுக்கு போதியளவு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்திய முதலமைச்சர் வடமாகாண மக்களின் உற்பத்திகளை வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Posts