Ad Widget

இலங்கை கடற்படை வரலாற்றில் முதலாவது தொழில்நுட்பக் கப்பல்

இலங்கை கடற்படை வரலாற்றில் முதலாவது தொழில்நுட்பக் கப்பலை இந்தியாவிடம் இருந்து இலங்கை கொள்வனவு செய்துள்ளது.

இதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு குறித்த கப்பலை நிர்மாணிப்பதற்காக இலங்கையால் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதன்படி குறித்த கப்பலானது இந்தியாவினால் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட நிலையில், நேற்று இக்கப்பல் வந்தடைந்தது.

குறித்த கப்பலை தயாரிப்பதற்கு 66.55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கப்பலானது அதி சக்தி வாய்ந்த தொழிநுட்ப திறன் கொண்டுள்ள நிலையில், இலங்கையின் கடல் கண்காணிப்பு, மனிதாபிமான செயற்பாடுகள் மற்றும் அனர்த்த நிலைமைகள் போன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts