அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் 'விவேகம்'. இப்படத்தின் மூலம் உலகநாயகனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் இந்திய சினிமாவில் புதிய...

தொலைக்காட்சி வாங்குவதை விடுத்து நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துங்கள்!

“இன்று பலரும், நுண் நிதிக் கடன்களைப் பெற்று, வீட்டில் தொலைக்காட்சிகளையும் டிஸ் அன்டனாக்களையும் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை விட, வீட்டுக்கொரு வடிகட்டும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துவதன்மூலம், சுத்தமான குடிநீரைப் பருகமுடியும்” என்று, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, மாணவர்களின்...
Ad Widget

ஊடகவியலாளர்களிற்கு கடன் திட்டம் : விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஊடகவியலாளர்களின் தொழில்வான்மையை மேம்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படும் மாத்திய அருண என்ற கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக உயர்ந்த பட்சம் மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியின்றி கடன் வழங்கப்படவுள்ளது. இதேவேளை தம்மிடம் காணப்படும் ஊடக உபகரணங்களை திருத்துவதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான கடனை 50 சதவீத...

வடமாகாணத்திலும் ஜேர்மன் பயிற்சி நிலையம்

இலங்கை உற்பத்திகளுக்கு ஜேர்மனியிலும், ஜேர்மன் உற்பத்திகளுக்கு இலங்கையிலும் சிறந்த கிராக்கி நிலவுவதாக ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட தெரிவித்தார். எதிர்காலத்தில் வடமாகாணத்திலும் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஜேர்மன் எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார். ஜேர்மன் இலங்கையில் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிள்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வர்த்தக சமூகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் ஒன்றில் ஜேர்மன்...

உயர்தர பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவிக்கையில், உயர்தர பரீட்சை எட்டாம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி...

வித்தியா வழக்கில் தலைமறைவான ஸ்ரீகஜன் விரைவில் கைது: பொலிஸ்மா அதிபர்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்.பொலிஸ் தலைமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப்...

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் ஏற்படும்: இரா.சம்பந்தன்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக...

அவசர குடிநீர் தேவை ஏற்படின் 117 அழைக்கவும்!

நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் குடிநீர் விநியோகிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதாவது குறைபாடுகள் காணப்படின் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்...

யாழ் பாதுகாப்பு தொடர்பில் விசேடமான வித்தியாசமான மூலோபாய நடவடிக்கைகள் : பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர

யாழ். குடாநாட்டில் இராணுவம், கடற்படை, விமானப்படையினருடன் பொலிஸ் அதிரடிப் படையினரையும் இணைத்து இறுக்கமான பாதுகாப்பு கட்டமைப்பை செயற்படுத்தவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலைத் தொடர்ந்து அங்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் ஊடகங்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்....

யாழ்.வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஹபீர் ஹாசிம் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘வாள்வெட்டு...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது: பட்டியல் இணைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படாத தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை, எம்.ஐ.-24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியமை,...

கரையொதுங்கிய ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

ஊர்காவற்றுறைக் கடற்பரப்பில், கடந்த 28ஆம் திகதி கரை ஒதுங்கிய ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டவர், யாழ்ப்பாணம் - நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்தராசா யெயந்தன் (44 வயது) என, அவரது மனைவி யெயந்தன் திருச்செல்வி என்பவரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்கு யாழ்ப்பாணம் வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்...

நல்லூர் துப்பாக்கிச் சூடு: டெஸ்டர் கொடுத்த மனைவிக்குச் சிக்கல்

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு, அவரது மனைவி டெஸ்டர் (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி) ஒன்றை, பொதிக்குள் வைத்துக் கொடுக்க முயன்ற வேளை, சிறைச்சாலைக் காவலர்களால் அது கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ். சிறைச்சாலையில், தனிச் சிறைக்கூடத்திலேயே சந்தேகநபர், தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சந்தேகநபரின் மனைவி, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருக்கு உடைகளை வழங்கப் பொதி செய்து, சிறைச்சாலை...

வடக்கு முதல்வருடன் ராணுவத் தளபதி சந்திப்பு

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க நேற்று (30) சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு நேற்று பிற்பகலில் முதலமைச்சரின் நல்லூரிலுள்ள உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கருத்து வௌியிடுகையில், இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமாக இடம்பெற்ற ஒன்றல்ல என குறிப்பிட்டார். ராணுவத் தளபதி வடக்கிற்கான விஜயத்தை...

யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு!

யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸார் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொக்குவில், பொற்பதிப் பகுதியில் நேற்று (ஞாற்றுக்கிழமை) குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவரே இந்த வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்....

துப்பாக்கிதாரி நீதிபதியைக் கொலை செய்வதற்காகவே வந்தார்: ரெஜினோல்ட் குரே

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் அவரைக் கொலை செய்வதற்காகவே வந்தார் என வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைப் பிரிவின் ஏற்பாட்டில் சாதாரண தர பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு...

கலாசார சீரழிவு மலிந்த ஒரு இனமாக நாம் மாறியுள்ளோம்: வடக்கு முதலமைச்சர்

கலாசார சீரழிவு மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கும் விடயம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாவாந்துறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நூலகத் திறப்பு விழாவில் உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு நூலகம் அப் பகுதியில் உள்ள...

யாழ். நகர நடைபாதை வியாபாரிகளுக்கான கடைத்தொகுதிகள் திறந்து வைப்பு!

யாழ். நகர நடைபாதை வியாபாரிகளின் நலன்கருதி அமைக்கப்பட்ட கடைத்தொகுதிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் கோரிக்கைக்கமைவாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான காணியில் 76 கடைத்தொகுதிகளை கொண்டதாக இந்த நகர மத்தி கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட அரச...

யாழ்ப்பாணத்தில் தீவிர பாதுகாப்பு!

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோப்பாய் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மர்மநபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஆவா குழுவின் செயற்பாடா என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

சீன- இலங்கை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கை அரசாங்கமும், சீன மேர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனமும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்காளர்களாக மாறியுள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு எதிர்க் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு அமைப்புக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது. இவ்வுடன்படிக்கை குறித்து கருத்துத்...
Loading posts...

All posts loaded

No more posts