சிறிசேனவும் நடராசாவும் முகம்மட்டும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்க வேண்டும்!! : ஆளுநர்

”கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தமிழ் வித்தியாலயம், சிங்கள வித்தியாலயம், முஸ்லிம் வித்தியாலயம் என்று தனித்தனியே பாடசாலைகள் அமைக்கப்படாமல், சிறிசேனவும் நடராசாவும் முகம்மட்டும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். அதுவே நல்லிணக்கத்திற்கு சிறந்த வழியாக அமையும்” என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அரச...

வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் : அமைச்சர் கிரியெல்ல

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வவுனியா வளாகத்தின் 25ஆவது வருட நிறைவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தரமுயர்த்துவதற்கு பாடுபட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்...
Ad Widget

‘பாப்பரசராக முயற்சிக்கிறார் தவராசா!’ : வடக்கு முதல்வர் சி.வி. குற்றச்சாட்டு

பாப்பரசரை போல பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காகவே வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகிறார் என, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 102ஆவது அமர்வு, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அமர்வின் ஆரம்பத்திலேயே முதலமைச்சருக்கும் மாகாண எதிர்க்கட்சித்...

கரைச்சி பிரதேச சபையின் அசமந்தப் போக்கு

கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை சுத்தம் செய்வதற்கு, கரைச்சி பிரதேச சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியிலிருந்து, இரணைமடு சந்தி வரையான ஏ9 வீதியில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய நிலையில் குப்பைக்கூலங்கள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. குப்பைக்கூலங்கள் காணப்படும் பகுதிகளுக்கு அண்மித்தவாறு குடியிருப்புக்கள் காணப்படுகின்ற...

தென்மராட்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

தேசிய சமூக நீர் வழங்கல் செயற்றிட்டத்தின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவு மக்களுக்கான சுத்திகரித்த நீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தினை தமிழரசு கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த திட்டத்தின் கீழ் நாளாந்தம் 10,000 லீற்றர் நீர் சுத்திகரித்து வழங்கப்படவுள்ளன. ஜனாதிபதி...

யாழ் பல்கலைக்கழக அணிக்கு வெள்ளி பதக்கம்

பல்லைக்கழகங்களுக்கிடையில் தேசிய ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட தொடரில் பெண்கள் பிரிவில் யாழ் பல்கலைக்கழக அணி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுள்ளது. சப்ரகமுவ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப்போட்டித்தொடரில் யாழ் பல்கலைக்கழக அணியுடன் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக அணி போட்டியிட்டது. இந்த போட்டியில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணி இரண்டாம்...

இந்திய கிரிக்கட் அணியை குறைத்து மதிப்பிடமுடியாது : விளையாட்டுத்துறை அமைச்சர்

இந்திய கிரிக்கட் அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. இதேவேளை எமது கிரிக்கட் அணியில் இடம்பெற்றுள்ள தற்போதைய வீரர்களும் திறமைசாலிகளே. இவர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது . இவர்கள் தவிர வேறுயாரும் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் விளையாட்டுத்துறை...

சமூர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது!!, புதியவர்களை உள்வாங்கத்திட்டம்

சமூர்த்தி கொடுப்பனவு தொடர்பில் கனணி மூலம் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த செயல்முறை நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஐித சேனாரட்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கணனி மூலமான...

யாழில் அகற்றப்படும் கடைகள்!

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 09 கடைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று (புதன்கிழமை) அகற்றப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதியே நேற்றய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தாம் கடன்களை பெற்று...

கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை இறங்குதுறைகள் புனரமைக்கப்படாததன் காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் தமது படகுகளை கரைக்குக் கொண்டு வருவதில் தொடர்ச்சியாக கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் இந்த பிரச்சினை தொடர்வதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழில் மேற்கொள்வதில் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில்...

படைக்கு தமிழர்களை சேர்க்கும் வேலையை முதலமைச்சர் கைவிடவேண்டும்: சிவமோகன்

அரசினால் தமிழருக்குரிய பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கின் முதலமைச்சர் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணையச்சொல்வது சர்ச்சைக்குரிய விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் இளைஞர்...

டெனிஸ்வரனின் நடவடிக்கை வேதனையை ஏற்படுத்தியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கட்சியின் கட்டளை தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பிலான நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் ஊடகங்களுக்கு...

இலங்கை, இந்திய கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழக அரசு நடவடிகை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொழும்பு – தூத்துக்குடிக்கு இடையில் இருந்து வந்த கப்பல் சேவையானது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் குறித்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ்...

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய கூடுகிறது கூட்டமைப்பு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய, விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் வகையிலான யோசனைகள் அடங்கிய 20ஆவது திருத்தச் சட்ட வரைபு, அண்மையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,...

ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்தியா அணிக்கெதிரான 5 ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டுத்தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா இந்தியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை படு மோசமாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், பல மாற்றங்களுடன் இலங்கை அணி ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டுத்தொடருக்கு முகம் கொடுக்கவுள்ளது. டெஸ்ட் போட்டியின் போது காயம்...

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் பொறுப்பல்ல!!

“யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை” என்று, புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார். “நான் இதனை, நம்பிக்கையுடனும் மிகவும் பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு...

டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பது ஜனநாயக பண்புகளை மீறும் செயல் : ஜனநாயகப் போராளிகள் கட்சி

வடமாகாண சபை அமைச்சுக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் பதவி விலககோருவது ஜனநாயகப் பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடுகளகவே நாம் கருதுகின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. வடமாகாண சபை அமைச்சர் டெனீஸவரன் பதவி விலகல் தொடர்பாக ஜனநாயப் போராளிகள் கட்சியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . வடக்கில் இடம்பெறும் பதவிசார்...

கிரிக்கட்ட சபை தலைவர் பதவி விலக வேண்டும் : அமைச்சர் அர்ஜுண ரணதுங்க

தொடர்ச்சியாக பல தோல்விகளை கண்டுவருகின்றது இலங்கையணி, இதனால் கிரிக்கட்ட சபையின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் நாங்கள் வெல்லவேண்டுமானால் கிரிக்கட் நிர்வாகத்தில் உள்ளவர்களை மாற்றவேண்டிய தேவை தற்போதுள்ளது. இதனை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின் ஊடகவியளார்களின் கேள்வியின் போதே தெரிவித்தார்....

வெற்றிடங்களை நிரப்ப தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பியுங்கள்: அங்கஜன்

வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தாதிய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியின் மூலம் தாதிய உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு சுகாதார போசனை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சினால் விண்ணப்பங்கள்...

‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ள இலங்கை அரசாங்கம்

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள், வெளிநாட்டில் இருந்தவாறு குற்றச்செயல்களை நெறிப்படுத்துவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு முதல்வர்...
Loading posts...

All posts loaded

No more posts