யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 09 கடைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று (புதன்கிழமை) அகற்றப்பட்டுள்ளது.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதியே நேற்றய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் தாம் கடன்களை பெற்று வர்த்தக நிலையங்களை நிர்மானித்ததாகவும் கடந்த ஏழு வருடங்களாக தாம் குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபாரத்தை மேற்கொண்டுவரும் நிலையில் காலஅவகாசம் வழங்காது கடைகளை அகற்றுவதாக வர்த்தகர்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.
குறித்த கடைகள் அமைந்துள்ள காணி மாநாகசபைக்கு சொந்தமானதாகும், இதனை கடந்த 2014 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.