Ad Widget

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய கூடுகிறது கூட்டமைப்பு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய, விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் வகையிலான யோசனைகள் அடங்கிய 20ஆவது திருத்தச் சட்ட வரைபு, அண்மையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து ஆராய்ந்த பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெரிவிக்க முடியுமென சம்பந்தன் கூறியுள்ளார்.

இதேவேளை, இதற்கு தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இதனை எதிர்ப்பதாக, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts