நாட்டின் பல பாகங்களிலும் மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம்!

நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களுக்கு இன்று மற்றும் நாளை மழை வீழ்ச்சி வீதம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேடமாக ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களுக்கும் மாத்தளை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் பலமான காற்று வீசக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக கடற்பிரதேசங்களுக்கு பலத்த காற்று வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சபரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும்...

தேர்தலில் வெற்றிப் பெறும் பெண்களை கண்டு அஞ்சும் அரசியல் தலைமைகள்!! : அனந்தி

தேர்தலில் வெற்றிப் பெறும் பெண்களை கண்டால் அரசியல் தலைமைகள் தமது ஆசனம் பறிபோய்விடும் என்ற பயத்துடன் இருப்பதாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிக்கன கடன் கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மக்களுக்கான சேவையில்,...
Ad Widget

வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்: வரதராஜப் பெருமாள்

வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று வடக்கு மாகாணசபையில் அடிபட்டுக் கொண்டிருப்பவர்கள் தேர்தல் காலத்தில்...

21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமனம்

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா...

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிக்கக் கோரிக்கை!

நெடுந்தீவு வைத்தியசாலையினுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து தருவதோடு, அங்கு நிரந்தர வைத்தியர்கள், மற்றும் தாதியர்களை நியமிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் குடாநாட்டில் தீவுகளில் ஒன்றாகக் காணப்படும் நெடுந்தீவு வைத்தியசாலையில் அடிக்கடி வைத்தியர் இன்றிக்காணப்படுவதால் இந்தப்பிரதேசத்தில்உள்ள சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ தேவைகளைப் பெறுவதில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேற்படி வைத்தியசாலை...

கொக்குவில் தோட்டம் ஒன்றில் ஆவா குழுவின் மோட்டார் சைக்கிள் மீட்பு!

ஆவா குழு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் பாழடைந்த தோட்டம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை முகாம் படையணி ஒன்று இந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளது. உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் தோட்டம் ஒன்றில் காணப்படுவதாக அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை...

திருட்டுப் போன மோட்டார் சைக்கிளை 15 நிமிடத்தில் மீட்ட பொலிஸாருக்கு மக்கள் பாராட்டு!

யாழ். வடமராட்சி இரும்பு மதவடியைச் சேர்ந்த நபரொருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வர்த்தக நிலையமொன்றுக்குப் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளைக் காணாமையால் திகைப்படைந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் நெல்லியடிப் பொலிஸாருக்கு முறையிட்டார். இதனையடுத்து விரைந்து செயற்பட்ட நெல்லியடிப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் நெல்லியடி...

சாவகச்சேரியில் கடனை வசூலிக்கச் சென்றவர்களால் குழப்பம்

யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் கடனை வசூலிக்க நேற்றிரவு, வாடிக்கையாளரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில், சாவகச்சேரி , கிராம்புவில் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கடனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாவை...

இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்!!

கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 21வது கடற்படை தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தற்போது கடற்படை தளபதி பதவியை வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்.

வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தாலையே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கின்றார் : சி.வி. விக்னேஸ்வரன்

வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,...

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார் முதலமைச்சர் : சி.தவராசா

வட மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை. என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குறிப்பிட்டு உள்ளார். எதிர்க்கட்சி தலைவரினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட...

மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்ற வைத்தியர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா? : சிவாஜிலிங்கம் கேள்வி

தனியார் மருத்துவக்கல்வியை எதிர்க்கும் வைத்தியர்கள் மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்ற வைத்தியர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா? என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள...

அமைச்சர் ரிஷாதை பதவி விலக கூறும் அய்யூப் அஸ்மின்

முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளை மீட்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் வடாமாகாண முதலமைச்சர் ஆகியோர் தலையிடுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீன் தடையாக உள்ளார் என கூறியிருக்கும் வட மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், மேற்படி காணிகளை மீட்க முடியாமைக்காக அமைச்சர் றிஷாட் பதியூதீன் பதவி துறக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

 வட...

காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்த வெளிநாட்டு பிரதிநிதிகள்

கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) காலை அங்கு சென்ற வெளிநாட்டு பிரதிநிதிகள், அம் மக்களின் நிலை குறித்து கேட்டறிந்துகொண்டனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக கடந்த 179 நாட்களாக இம் மக்கள்...

பொலித்தீன் தடை தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை: ஜனாதிபதி

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அஸ்பெஸ்டஸ் மற்றும் புகையிலை தடைக்காக அரசாங்கம் செயற்படும்...

இளம் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரருக்கு எமனானது பந்து!!

கிரிக்கெட் பந்து தலையில் தாக்கி பாகிஸ்தானின் பிரபலமான இளம் கிரிக்கெட் வீரரான சுபய்ர் அகம்மட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிராந்தியங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த போதே குறித்த வீரர் உயிரிழந்துள்ளார் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தின் போது கிரிக்கெட் வீரர்கள் தங்களது பாதுகாப்புக்கென அணியும் தலைக்கவசத்தை சுபய்ர் அகம்மட் அணிந்திராமையினாலேயே...

இணைய சேவைக்கான வரி நீக்கம்; மோட்டார் சைக்கிள் மீதான வரி குறைப்பு

இணைய சேவைக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 வீத தொலைத்தொடர்பு வரி வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் குறைக்கப்படும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். அதேவேளை 150 சீசீ இற்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நூற்றுக்கு 90 வீதத்தால் குறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்....

ராணுவ உதவியுடன் வடக்கில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

இராணுவத்தினரின் உதவியுடன் வடக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தென்னிலங்கை பகுதியில் தீவிரமாக பரவியுள்ள டெங்கு நோய், வடக்கிற்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று தொடக்கம் மூன்று தினங்களுக்கு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரின் உதவியுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சி நகர்...

தியாகி திலீபனின் நினைவுத்தூபியை புனரமைக்க நடவடிக்கை

யாழ். நல்லூர் பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ். மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார். தியாகி திலீபனின் நினைவிடம் எவ்வித பாதுகாப்பு வேலிகளும் இன்றி வெறுமனே காணப்படும் நிலையில், அதற்கு எல்லைகளை போட்டு பாதுகாப்பு...

காணாமல் போனோர் பிரச்சினை: தென்னிலங்கை மக்களை நம்பும் உறவினர்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது இறுதி நம்பிக்கையாக தென்னிலங்கை மக்களை நாடியுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம், 179வது நாளாகவும் நீடிக்கின்றது. இந்நிலையில், கொழும்பிற்கு சென்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர், இன்றைய தினம்...
Loading posts...

All posts loaded

No more posts