Ad Widget

நாட்டின் பல பாகங்களிலும் மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம்!

நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களுக்கு இன்று மற்றும் நாளை மழை வீழ்ச்சி வீதம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களுக்கும் மாத்தளை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் பலமான காற்று வீசக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக கடற்பிரதேசங்களுக்கு பலத்த காற்று வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சபரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இடைக்கிடையியே மழைபெய்யக்கூடிய அதேவேளை, வடமேல் மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களுக்கும் விசேடமாக சபரகமுவ மாகாணம், காலி, கழுத்தறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts