ராணுவ உதவியுடன் வடக்கில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

இராணுவத்தினரின் உதவியுடன் வடக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தென்னிலங்கை பகுதியில் தீவிரமாக பரவியுள்ள டெங்கு நோய், வடக்கிற்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று தொடக்கம் மூன்று தினங்களுக்கு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரின் உதவியுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக, கிளிநொச்சி நகர் பகுதியில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இடம்பெற்றது. நகரின் பல பகுதிகளில் தேங்கிக் கிடந்த குப்பைக் கூலங்கள் அகற்றப்பட்டு, டெங்கு பரவும் அபாயம் உள்ள பகுதிகள் இனங்காணப்பட்டு இதன்போது அழிக்கப்பட்டன.

இந் நடவடிக்கையில், ராணுவத்தினருடன் அனைத்து திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts