இடிமின்னலிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் , வடக்கு கிழக்கு கடற்கரையோர பிரதேசங்களிலும் இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு , வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...

வளிமண்டலத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு : மக்களே எச்சரிக்கை !

தெற்கு அந்தமான் தீவு கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக உருவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, குறித்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை 5 ஆம் திகதி மேலும் வலுவடைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல்பகுதி குறிப்பாக வடக்கு, கிழக்கு,...
Ad Widget

இராணுவம் அரசியலில் ஈடுபடக்கூடாது: முல்லைத்தீவில் இராணுவத் தளபதி!

தனிப்பட்ட நோக்கங்களுக்காக இராணுவத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில் இராணுவ பிரிவினரை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது இராணுவ வீரர்களின் கடமை எனவும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில்...

புதிய கட்டடத்தொகுதிக்கு அடிக்கல் நாட்டினார் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

242 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காலை 9.45 மணிக்கு நட்டார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இரா.கண்ணன் மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன்,...

கூட்டமைப்பின் புதிய தலைமுறை தேர்தலை எதிர்கொள்ளும்: மாவை சேனாதிராஜா

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வினைத்திறன்மிக்க இளைஞர்களை களமிறக்கவுள்ளதாகவும் பலமான அணியாக களமிறங்கும் எனவும் தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணிகள் தொடர்பாக தமிழரசுக்கட்சி மற்றும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுக்கிடையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை யாழ். மார்ட்டின்...

முன்னாள் போராளிகளும், வடக்கு முக்கியஸ்தர்களும் மஹிந்தவுடன் கைகோர்ப்பு?

எதிர்வரும் தேர்தல்களில் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களும், வடக்கு தமிழ் சமூகத்தின் முக்கியஸ்தர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிட முன்வந்துள்ளதாக பொதுஜன முன்னணியின் வடமாகாண பொறுப்பாளர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஹிந்தவின் காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள்...

இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும் அகற்றப்பட்டுள்ளது . இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தை யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தங்களின் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள்...

கதிரைப் பங்கீட்டில் தமிழரசுக்குள் குடுமிச் சண்டை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று பங்கிட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஏதும் எஞ்சப்போவதில்லையென தமிழரசின் இரண்டாம் கட்ட தலைமைகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 சபைகளையும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒரு சபையினையும் கோரவுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பானது...

முன்னணியுடன் முரண்பாடு இல்லை! ஆனந்தசங்கரியையும் கைவிடுவதாய் இல்லை!! : சுரேஸ்

தமக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை. அதேபோல் தாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆனந்தசங்கரியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலைச் சந்திக்க பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக...

யாழில் மாணவர்களை இலக்குவைத்து “ஹெரோய்ன் ரொபி“

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் ரொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அளித்த பதிலையடுத்தே, அவர் மேற்கண்டவாறு...

ஓக்கி சூறாவளி 850 கிலோ மீற்றர் தொலைவில்

ஓக்கி சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கை;கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லி...

யாழில் பேருந்தைத் திருடி சென்ற நபரால் பரபரப்பு!

யாழ். நகரை அண்டிய பகுதியில் சுவாரஸ்யமான முறையில் பேருந்தைத் திருடி சென்ற நபரால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வழமை போன்று சேவையில் ஈடுபட்டு யாழ்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்திருந்தது. பயணிகளை யாழ்.நகரில்...

சுன்னாகம் பொலிஸாரினால் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதி கேட்ட போது, தனது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சாவை வைத்து தன்னை அச்சுறுத்தியதாக யாழ்.வர்த்தகர் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் மாவீரர் நாளான கடந்த 27ஆம் திகதி இளைஞர்கள் மீது சுன்னாகம்...

கைது செய்யப்பட்ட ஆவா குழுவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவை சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ் வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், விசாரணைகளின் பின்னர் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில்...

வடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு சாத்தியமாகாது : விக்னேஸ்வரன்

வடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்குசமச்சீரில்லாததனி அலகு உருவாக்கப்படுவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகும் என வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராவாராம் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவரிடம், வடக்கு,கிழக்கை இணைக்க முனைப்புடன் செயற்படுவதன் காரணம் என்ன என வினவப்பட்டது. இதற்கு பதிலளித்து முதலமைச்சர், வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இணைப்பு இல்லாத...

சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் மரணம், 14 மாவட்ட மக்கள் நிர்க்கதி

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேரை காணவில்லை எனவும், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல் அசாதாரண காலநிலை காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த 61,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இரத்தினபுரி,கண்டி,காலி,மாத்தளை,பதுளை,...

அரச பஸ் சேவைகள் வடக்கில் ஸ்தம்பிதம்!! யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் குழப்பநிலை!!!

அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை ஆரம்பித்தனர். வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்றவேண்டும் என்ற...

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும்...

முன்னாள் கடற்புலித் தலைவர் தமிழரசுக் கட்சியில் இணைவு!

யுத்த காலத்தில் மன்னார் பகுதியில் கடற்புலித் தலைவராக இருந்த தியாகவராசா அருள்செல்வம் என்பவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான நேற்றுமுன்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனை சந்தித்த அவர், தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார் எனவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்...

யாழ். பல்கலையில் மாவீரர்தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

உலகெங்கும் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாவீரர் தினம் பல்கலைக்கழக சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில், உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீத்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில்,...
Loading posts...

All posts loaded

No more posts