Ad Widget

இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும் அகற்றப்பட்டுள்ளது .

இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தை யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தங்களின் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருவதுண்டு.

அவர்களின் வழிப்பாட்டுக்காக அமைக்கப்பட்டதாக கூறப்படும் புத்தக்கோவிலின் சிலையே தற்போது அகற்றப்பட்டுள்ளது.

குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு வருகின்ற போது குளத்தின் பொறியியளாரின் அலுவலகம் மீள் புனரமைப்பு காரணத்தால் இராணுவம் அங்கிருந்து வேறு ஓர் இடத்திற்கு மாற்றப்பட்டது.

பின்னரும் புத்தர் கோவில் குளத்தின் அருகிலே இருந்தது.

குளத்தின் அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படும் என்பதன் காரணத்தால் புத்தர் கோவிலிலிருந்த சிலை இராணுவத்திரால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts