சா.தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு: கல்வி அமைச்சர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு அனுலா கல்லூரியில் நடைபெற்ற தேசிய சுரக்ஸா காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையின் போது ஒன்பது பாடங்கள் தற்போது கட்டாய...

ஈ.பி.டி.பி கட்சியின் மூத்த உறுப்பினர் தவராசா தமிழரசு கட்சியுடன் இணைவு?

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான சின்னத்துரை தவராசாவை தமிழரசு கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர். எல்.எப்.கட்சி பிரிந்து சென்ற நிலையில் ரெலோவும் புளொட்டும் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் , கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் தமிழரசு...
Ad Widget

தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமஉரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முன்னுரை தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதையும் இலக்காகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இணைந்து தேர்தல் கூட்டு ஒன்றை உருவாக்கியிந்தன....

உதயசூரியன் சின்னத்தில் புதிய அணி

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சின்னமான உதயசூரியனின் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றள்ளன. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் சிவில் அமைப்புகளின் தலைவர் சிவகரன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் உதயசூரியன் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும்...

அரசின் வரவு-செலவுத் திட்டத்தை அங்கீகரித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்

தேர்தல் நடத்தப்பட முன்னதாக வடபகுதியில் வசித்து வந்த பௌத்த, முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்த வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ‘எலிய’ அமைப்பின் ஊடகச் சந்திப்பொன்றின்போது பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “உலகிலேயே, அரசு முன்வைத்த ஒரு வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ்...

வட.மாகாணசபையின் பாதீடு முதலமைச்சரால் முன்மொழிவு!

வடமாகாணசபையின் 2018ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு நேற்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனால் முன்மொழியப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 111 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று காலை சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது 2018ஆம் நிதி ஆண்டுக்கு 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரம் என மதிப்பீடு...

கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நிதி எங்கே?: சிவஞானம்

வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்பதை கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோள்வியெழுப்பியுள்ளார். வட.மாகாணசபையின் 111வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. மேற்படி விடயம் தொடர்பாக சபைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவைத் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...

ஆளணித் தெரிவில் இழுபறி: கூட்டத்திலிருந்து ரெலோ மற்றும் புளொட் வெளியேறின!

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள் அதிருப்தியுடன் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற மேற்படிக் கூட்டத்திலிருந்தே குறித்த கட்சிகள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய...

அனர்த்த நிலமைகள் குறித்து யாழில் விஷேட கலந்துரையாடல்

அனர்த்த நிலமைகள் குறித்து வட, கிழக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன் ஆயத்த கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. அவசர நிலமைகள் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்வது தொடர்பில் ஆராயும் பொருட்டு ஏற்பாடு ​செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல், யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில்...

இந்தியா செல்ல முற்பட்ட 9 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது. தலா மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு இருபது...

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக மின்மானி வாசிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக மின்மானி வாசிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். மின்கட்டணம் எந்த வகையிலும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி,...

ஊடகவியலாளர் மீது தென்மராட்சியில் தாக்குதல்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒளிபரப்பாக செயற்படும் யாழ்.எப்எம் வானொலியில் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியில் அமைந்துள்ள வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.எவ்எம் பிரதம செய்தியாளரான எஸ்.மனோகரன் என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டவராவார். இச் சம்பவம் நேற்று மாலை சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது. தாக்கியவர்கள் முச்சக்கரவண்டியில் மிகுந்த மதுபோதையில் தாக்குதலை...

நீதிமன்றுக்கு அழைத்துவரும் வழியில் தப்பி ஓடிய சந்தேக நபர்கள் !!

வவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம், நேற்று (05) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் அறையை உடைத்து, கஞ்சா திருடியக் குற்றச்சாட்டில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவ​ரில் இருவரே, இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். எனினும், 2 மணிநேர தேடுதலின்...

சுவிஸ்குமாரை பொலிஸ் காவலிலிருந்து விடுவித்த உதவிய குற்றச்சாட்டு வழக்கு முன்னாள் டிஜஜியின் சாட்சியத்தை ஏற்க நீதிமன்று அனுமதி

வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கின் முதலாவது சந்தேகநபரான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.எல்.பெரேராவால் வழங்கப்படும் சாட்சியைப் பதிவு செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் இன்று கட்டளையிட்டார். லலித்...

துன்னாலை இளைஞன் சுட்டுக்கொலை: பொலிஸார் இருவரும் பிணையில் விடுவிப்பு

வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. வடமராட்சி கிழக்கில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஷ்...

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என அறிவிக்கும் பெயர்ப் பலகை!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கனகபுரம் துயிலும்...

சாவகச்சேரியில் இருவேறு இடங்களில் வாள் வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!!

சாவகச்சேரி மீசாலை பகுதியில் நேற்று இரவு 7.30 அளவில் இரு வேறு இடங்களில் வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீசாலை கிழக்கு - மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த ஆறு பேர் கொண்ட குழுவினர், அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு, கடைக்கும் சேதமேற்படுத்தி...

வெளிநாடு செல்லும் மக்களுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் எச்சரிக்கை!

தரகர்களால் தரப்படும் வீசா மற்றும் விமான பயணச் சீட்டை பயன்படுத்தி சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக வெளிநாடு செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு, யாழ்ப்பாணப் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்ல முற்பட்ட பலர் ஏமாற்றப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே பொலிஸார் குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். நேற்றையதினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற...

புதுடில்லியில் இலங்கை வீரர்கள் செய்தது சரியே : இந்திய மருத்துவ நிபுணர்

புதுடில்லியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வீரர்கள் வளி மாசடைதலைக் காரணம் காட்டி போட்டியை இடைநிறுத்தியது சரியானதே என இந்திய மருத்துவ நிபுணர் பிரசாந்த் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்தியத் தலைநகர வளிமண்டலம் பெரிதும் மாசுபட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மிகவும் மோசமான விதத்தில் வளி மாசுபட்டிருந்தது. இதன் காரணமாக இலங்கை வீரர்கள் மூக்கையும் வாயையும்...
Loading posts...

All posts loaded

No more posts