- Friday
- May 15th, 2026
அரசியலமைப்பின் ஊடாக அதிகாரங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை மத்திய அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புத் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும்...
முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பகுதியில் சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் இராணுவம் தொடர்புபடவில்லை என இராணுவச் பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இராணுவ சீருடையின்றிய சிலர், ஊடகவியலாளரை...
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீதும் மாங்குளம் சந்தியில் வைத்து பிறிதோர் இளைஞர் மீதும் தாக்குதல் நடத்திய ஆவா குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து, வௌ்ளிக்கிழமை (08) இரவு 8.45 மணியளவில் மல்லாவிப் பகுதியில்...
தான் யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறவுள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை, பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன், மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான மாற்றல் விரைவில் எனக்கு வரும், என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும் இடமாற்றலாகும் உத்தியோகத்தர்களுக்கான கெளரவிப்பு விழாவிலும்...
வடக்கு- கிழக்கில் ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை என்று வடக்கு கிழக்கில் உள்ள இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலையின் காரணமாக வடக்கு கிழக்கில் கடந்த 4 தினங்களுக்கு மேலாக மீனவர்கள் தமது தொழிலுக்காக கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் நேற்றயதினம் வடக்கு கிழக்கில் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் மீனவர் ஈடுப்பட்டதாக...
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். உள்ளூராட்சி...
வவுனியா ஓமந்தை கல்லுப்போட்டகுளத்தில் மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவரால் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதை கண்டித்தும்,அதற்கான நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 29 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர், கர்ப்பமடைந்துள்ளமை உறுதியானது. இதனையடுத்து ஓமந்தை பொலிஸார்...
யாழ்.பருத்தித்துறை திக்கத்தை சேர்ந்த 59 வயதான குடும்பஸ்தர் ஒருவர் தனக்குதானே தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். உயிரிழந்தவர் சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்துவந்ததாகவும், அவரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். தீக்காயங்களுக்கு உள்ளான அவர் முதலில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று மாலை 2.15 மணிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர்...
ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குழப்பநிலைமைகள் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடந்து கருத்து தெரிவித்த அவர் “தமிழ்த்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”சுயநலம் மேலோங்கும்போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து...
“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம், வருகின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலைப் பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (08) 292ஆவது நாளாக கிளிநொச்சியில்தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்து...
“இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டும்” என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயக அரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக...
வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈபிஆர்எல்எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என அறிய முடிகின்றது. கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது....
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடானது, சர்வதேசத்தின் ஆதரவையும் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே அமையுமென அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தின் மீதும் தற்போதைய அரசாங்கத்தின் மீதும் சர்வதேச அழுத்தம் ஏற்பட, தமிழ் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று குறிப்பிட்ட சுமந்திரன், இலங்கை...
ஒரு தேர்தல் அரசியலுக்காக தமிழ் மக்கள் பேரவையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையை எதிர்க்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்ய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
துரித மீள்குடியேற்ற செயற்றிட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 9 ஆயிரம் மில்லியன் ரூபாவில், 5811 வீடுகளும், 2,533 மலசலகூடங்களும் அமைக்கப்பட்டிருப்பதுடன், 348 பொது கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு அனுலா கல்லூரியில் நடைபெற்ற தேசிய சுரக்ஸா காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையின் போது ஒன்பது பாடங்கள் தற்போது கட்டாய...
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான சின்னத்துரை தவராசாவை தமிழரசு கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர். எல்.எப்.கட்சி பிரிந்து சென்ற நிலையில் ரெலோவும் புளொட்டும் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் , கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் தமிழரசு...
Loading posts...
All posts loaded
No more posts
