இலங்கையின் வான் பரப்பில் மாற்றம்!

இலங்கையின் வான்பரப்பில் தற்காலத்தில் எரிகல் வீழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் உச்சக்கட்டம் இன்று(13) இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரையில் தொடரும். 14ம் திகதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையிலான காலப்பகுதியே இதனை சிறப்பாக பார்க்க உசிதமான காலம் என்று கூறப்படுகிறது. இந்த எரிகற்களின் வீழ்ச்சி, நீலம், சிவப்பு, பச்சை,...

நிலக்கண்ணி வெடிகள் அற்ற பிரதேசமாக முகமாலை

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரால் அதிகமாக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட கிளிநொச்சி-முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பிரதேசம் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக நேற்று(12) பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கையை சர்வதேச கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும் இராணுவத்தின் பொறியியல் அணியினால் முன்னெடுக்கப்பட்டது. நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட 48...
Ad Widget

டில்லு குழுவின் தண்டனை உறுதியானது

யாழ்ப்பாணம், மடம் வீதியில் குடும்பத் தலைவர் ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 8 பேருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தண்டணையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (12) உறுதி செய்தார். பொலிஸாரால் டில்லு குறூப் என அழைக்கப்பட்ட இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கே, தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்...

மூலதனச் செலவீடாக 3,843 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு : முதலமைச்சர்

2018 ஆம் ஆண்டுக்குரிய மூலதனச் செலவீடாக 3,843 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (12) நடைபெற்றது. இதன்போது, 2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாற தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத்...

பேரூந்தில் பயணித்த பெண்ணிடம் திருட்டு

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த வயோதிபப் பெண் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. யாழ். கச்சேரியடியை சேர்ந்த நாகேஸ்வரன் வனிதகுமாரி (வயது – 59) என்ற பெண், யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்த போது நேற்று (திங்கட்கிழமை) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேரூந்தில் காணப்பட்ட சன நெரிசலைப் பயன்படுத்தி, இப்பெண்ணின்...

அதிகாரப்பகிர்வை பெரும்பான்மையினருக்குள் அடக்க அரசாங்கம் முயற்சி: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மக்கள் யாவற்றிற்கும் தெற்கையே நம்பியிருக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்றும் இலங்கை மத்திய அரசு விரும்புகின்றதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முதலாவது வடக்கு மாகாண சபையின் ஐந்தாவதும் இறுதியுமான வரவு செலவுத் திட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பித்த முதல்வர், தமது ஆரம்ப உரையில் இதனைத்...

விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள்

இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள். கடந்த வாரமே இருவரும் இத்தாலியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது.இந்த நிலையில் நேற்று திருமணம் முடிந்தது. இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்...

யாழில் நடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் கைது

நடுவீதியில் கேக் வெட்டி பிறந்தநாளினை கொண்டாட முயன்ற இளைஞர்களை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ளே வீதியொன்றில் பிறந்தநாளை நேற்று இரவு இளைஞர்கள் சிலர் கொண்டாட முயன்றுள்ளார்கள். அதன் போது தமது மோட்டார் சைக்கிள்களை வீதியின் குறுக்கே நிறுத்தி அதன் மீது பிறந்த நாள் கேக்கினை வெட்ட இளைஞர்கள் தயாராகி உள்ளனர். அந்நேரம்...

சிறுமியை கடத்திய உறவினருக்கு விளக்கமறியல்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்ற உறவினரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 13வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 05ஆம் திகதி தன்னுடன் அழைத்து சென்று வவுனியாவில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். அந்நிலையில்...

சம்பந்தனின் வீடு முற்றுகை: தமிழரசுக் கட்சியினருக்கும் நெருக்கடி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் திருகோணமலை வீடு வேலையில்லாப் பட்டதாரிகளால் நேற்று (திங்கட்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதாக சம்பந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வாக்குறுதி வழங்கியிருந்தபோதும், கூட்டமைப்பும் அதன் தலைவரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக முற்றுகையில் ஈடுபட்ட பட்டதாரிகள் கூறியிருந்தனர். சம்பந்தனின் வீடு முற்றுகையிட்டதைப் போன்று தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சியினரின் வீடுகளை...

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டிக்கிறது யாழ். ஊடக அமையம்

தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரின் மீது அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள யாழ். ஊடக அமையம், இந்நிலைமை தொடராமல் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளது. யாழ். ஊடக அமையம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தாயகப் பகுதிகளில் மீண்டும்...

நெடுந்தீவு கடற்பரப்பில் 27 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 27 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு தென்கிழக்கே இவர்கள் நேற்று (திங்கட்கிழமை) இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, யாழ். கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஐந்து விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்...

ஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் இயந்திர சாரதிகளை உடன் பணிக்கு திரும்புமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நிலையை கருத்திற்கொண்டு, இவர்களை சேவைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரயுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கனவே இறுக்கமான கட்டத்தில்...

திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த பெட்டி சேதம்

யாழ்ப்பாணம், கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் அந்தோனியார் திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டி, இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. யாழ்., கோட்டை பகுதியில் அமைந்துள்ள குறித்த கிறிஸ்தவ தேவாலயத்துக்கு மிக அருகில் யாழ். தலைமை பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ முகாம் என்பன அமைந்துள்ளன. அண்மைக்காலமாக வடக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்துக் கோவில்களை...

சருமத்தை அழகு படுத்த பயன்படுத்தும் பொருட்கள் குறித்து நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை!

சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருளுக்கு சந்தையில் பெரும் கிராக்கி உண்டு.இதனை பயன்படுத்துவதன் மூலம் மேனி அழகாக காட்சியளிக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை. இதுதொடர்பில் சந்தையிலுள்ள பொருட்கள்குறித்து நுகர்வோர் அதிகார சபை பாவனையாளர்களின் கவனத்திற்கு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தேவையான...

ஆனைக்கோட்டையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: மானிப்பாய் பொலிஸார்மீது மக்கள் சந்தேகம்!!!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற கும்பலொன்று, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்தோடு, தாம் கொண்டுவந்த வாள்களால் வீட்டிலுள்ள பெறுமதிமிக்க பொருட்களை சேதப்படுத்தி, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர், 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும்...

யாழ்ப்பாணத்தில் போட்டியிட ஏழு கட்சிகள் தயார்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும் கட்டுப்பணத்தை கட்டியுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன 17 சபைகளிற்கும், சிறிலங்கா பொதுஜன பரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஆகியன சாவகச்சேரி நகரசபைக்கும்,...

பூநகரி பிரதேசத்தில் 38 பேர் தங்களின் கண்களை தானம் செய்துள்ளனர்!!!

கிளிநொச்சி- பூநகரி பிரதேசத்தில் இடம்பெற்ற கண் பரிசோதனையின் போது, 38 பேர் முன்வந்து இலங்கை கண்தான அமைப்புக்கு தங்களின் கண்களை தானம் செய்துள்ளனர். இராணுவத்தின் 66 படைப்பிரிவின் ஏற்பாட்டில், பூநகரி கிராஞ்சி பாடசாலையில் இடம்பெற்ற கண் பரிசோதனை நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 398 பேருக்கு கண் பரிசோதனை இடம்பெற்றது. மருத்துவர் வைத்திய கலாநிதி அஜந்த அபேயவர்தன, இதன்...

வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது

'வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன, என்று பொலிஸார் தெரிவித்தனர். "யாழ்ப்பாணம் - மானிப்பாய் - காரைநகர் வீதியில் நேற்று மாலை பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கும்பல் ஒன்று வாள்களுடன் நடமாடியதுடன் வழி பறிப்பிலும் ஈடுபட முயற்சித்துள்ளனர். பொதுமக்கள்...

அரசியல் மாற்றம் வட்டுக்கோட்டையிலிருந்து தொடங்கட்டும்: கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பிறந்த வட்டுக்கோட்டை மண் அதே உறுதியுடன் தொடர்ந்து தமிழ்த் தேசியத்துக்காகப் பயணிக்கவேண்டும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை)...
Loading posts...

All posts loaded

No more posts