- Friday
- May 15th, 2026
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக எதிர்காலத்தில் ஊடக கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்து உரிய தரப்பினரை அறிவுறுத்துமாறும்...
யாருக்கு அதிக ஆசனம் யாருக்கு குறைந்த ஆசனம் என நாங்கள் ஆசனங்களுக்காக தேர்தல் அரசியலுக்குள் முடங்கிப்போய்விடுவதானது அன்ரன் பாலசிங்கம் ஐயா வாழ்க்கை அவருடைய தியாகம் அவர் எங்கக்குச் செய்த பங்களிப்பு, வழிகாட்டல் அனைத்தையும் வீணடிப்பதாகவே இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போதய அரசியல் சூழல்களைப் புரிந்துகொண்டு தேசத்தின்...
ஒற்றையாட்சியை நிராகரிப்பதாயின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை நேற்று (13.12.2017) புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தாக்கல் செய்தனர். சாவகச்சேரி...
சில வைத்தியர்கள் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக பார்க்கின்றனர் அவர்கள் சட்டத்தில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி அதில் இருந்து தப்பி கொள்வதற்காக மனிதாபிமானத்திற்கு எதிராக கூட செயற்படுகின்றார்கள் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா. குணசீலன் கவலை தெரிவித்துள்ளார். யாழ்.நொதேர்ன் தனியார் வைத்திய சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி கண்புரை நீக்கி...
தனது அபாரமான துடுப்பாட்டத்தால் இலங்கைப் பந்துவீச்சாளர்களைச் சிதறடித்த ரோகித் ஷர்மாவின் இரட்டைச் சதத்தால், இலங்கைக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, இந்தியாவை துடுப்பாடப் பணித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தனர். ஆரம்பம்...
யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சங்கானை வீதியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் இவர்களை மடக்கி பிடித்துள்ளனர். இந்நிலையில், குறித்த இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில்...
யாழ் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரின் பேருந்துகளில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது கடந்த...
தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது. குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொண்ட போதே நீதிபதி இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்தார். மேலும் குறித்த நிறுவனத்தின் வர்த்தக...
உள்ளக சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு தமிழரின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை தமிழ்த் தேசிய...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவுகாலம் நெருங்கிவிட்டதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வாழைச்சேனை பிரதேச சபைக்காக நேற்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்....
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள், உயர் நீதிமன்றில் நேற்று (13) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரில் சென்று வழக்கு ஆவணங்களை உயர்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழ்வருக்கு தலா 56 வருட கடுங்காவல் தண்டனை விதித்து அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உட்பட ஏழ்வரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டிக்கப்பட்டவர்கள் மன்னார், சாவகச்சேரி, வவுனியா,...
மருத்துவபீட கற்கை நெறியை தொடர்வதற்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் ,பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஆகக்குறைந்தது இரண்டு திறமை சித்தியும் சாதாரண சித்தியொன்றும் ஒரே முறையில் பெற்றிருக்கவேண்டும் என்று அரசாங்கம் தீரமானித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை,...
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பின்படி இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை இலங்கை ஏற்றுகொள்ளாது. சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார். இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெருசலத்திற்கு நாங்கள் போகமாட்டோம். எமது இலங்கைக்கான தூதரகம் ரெல் அவி நகரத்தில் மாத்திரமே அமைந்து...
புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அமைச்சரவை குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புகையிரத பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு ரயில் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த பணிப்புரையை, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரணவை இன்று (புதன்கிழமை) சந்தித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஜனாதிபதியின் மேற்படி கோரிக்கையை நிராகரித்து கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது...
முல்லைத்தீவு விஷ்வமடு பகுதியில், பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்பிற்கு கடந்த 9ஆம் திகதி சென்ற குறித்த மாணவியை, அவ்வகுப்பை நடத்தும் ஆசிரியர் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். மாலை வேளை என்பதால்...
வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாணத்தை நோக்கிவரும் வெளிநாட்டு முதலீடுகளை தடுப்பதிலேயே வல்லுநர்களாக செயற்பட்டு வருகின்றனர் என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டு ஒதுக்கீட்டிற்கான இரண்டாவது வாசிப்பு மீதான உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
ஈபிஆர்எல்எவ் பத்மநாப அணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் கிடைக்காத நிலையில் தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்ட வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், நேற்று பிற்பகல் வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அண்மையில் வெளியேறியுள்ளது. இந்தக் கட்சி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து...
Loading posts...
All posts loaded
No more posts
