முல்லைத்தீவில் ஒருவகை காய்ச்சல்: 9 பேர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் பரவி வரும் ஒருவகை காய்ச்சலால், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்குள் இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இக்காய்ச்சல் தொடர்பில் தீவிர ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்!

யாழ்ப்பாணம் மாநகர சபை வேட்பாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து தான் வகித்து வந்த மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடித்தை, கடந்த 14ஆம் திகதி வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு மாநகர சபையாக உள்ள யாழ். மாநகர...
Ad Widget

8 விக்கெட்டுக்களால் இலங்கை தோல்வி: தொடர் இந்தியா வசம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ளது. பகலிரவு ஆட்டமாக விசாகப்பட்டனத்தில் தொடங்கிய நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. எனவே, குணதிலக மற்றும் உபுல் தரங்க ஆகியோர்...

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிங்கள்: சீ.வி.விக்னேஸ்வரன்

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மையும் திறமையுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அவர் ஊழலை வெறுப்பவராகவும் மக்களை நேசிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். மேலும், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல,...

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை (உள்நாட்டு நேரம்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 91 கிலோ மீற்றர்...

அளவெட்டியைச் சேர்ந்த பெண் கனடாவில் கொலை

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஜெயந்தி சீவரத்தினம் (வயது 46) என்ற குடும்பப் பெண் கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார் என ரொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். "கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மல வேர்ன் பகுதியில் அந்தப் பெண் உடலில் கடுமையான காயங்களுடன் மல்வேர்ன் வீதியில்...

யாழ். உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்!

யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது. சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை கையளிப்பதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய பதினாறு சபைகளிற்குமான கட்டுப்பணத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குங்கள் : ஐ.நா

இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தது. இந்த நிலையில் தமது விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில்...

தேர்தலுக்கு பின்னர் வேலையற்றபட்டதாரிகளுக்கு நியமனம்: ஆளூனர் உறுதி

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து கலந்துரையாடினர். கடந்த முறை வழங்கப்பட்ட பட்டதாரிகளது ஆசிரியர் நியமனத்தின் போது இடம்பெற்றிருந்த முறைகேடுகள் குறித்தும், எஞ்சிய பட்டதாரிகளின் நிலை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆளூனர்,...

யாழ்-கிளிநொச்சி குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 27கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி

ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம், யாழ் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன. இதன் பெறுமதி 27 கோடி அமெரிக்க டொலர்களாகும். ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம். தெற்கு, மத்திய. சப்ரகமுவ வடமேல் வடமத்திய மாகாணங்களிலும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலும் 2014 ஆம்...

எதிர்வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை

எதிர்வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணத்திலும் இடைக்கிடையே மழை பெய்யலாம். நாட்டின் பெரும்பாலான இடங்களில்; மழை பெய்யும்.என்று திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றறுக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகும் என்று...

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்!!!!

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கு கந்தையா அருந்தவபாலன் தலைக்கவசத்தால் தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பு மனு தயாரிப்பின் போது வேட்பாளராக முன்னர் நிறுத்துவதாக சம்மதிக்கப்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. அதனால் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் முரண்பட்டு கொண்டனர். முரண்பாட்டின் உச்ச கட்டத்தில்...

கடற்படையினரால் வீட்டுத்திட்டம் பறிபோனது: கவலையில் காரைநகர் மக்கள்

யாழ்ப்பாணம் காரைநகர் மடத்துவெளி மாதிரி கிராமத்தை கடற்படையினர் சுவீகரித்துள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கிடைக்கவிருந்த வீட்டுத்திட்டம் சங்கானை மாவட்ட செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாதிரி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான மடத்துவெளி மாதிரி கிராம மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்கவென, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 வீடுகளை...

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம்!

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டுமென, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதனை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் ஆமோதித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக, வேலியே பயிரை மேய்வதைப் போன்று வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை ஆசிரியர்களே துஷ்பிரயோகத்திற்கு...

அரியாலை படுகொலைச் சம்பவம்: STF அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை, நேற்று (வியாழக்கிழமை) மீள நடைபெற்றதோடு சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர்கள் அடையாளம்...

வாள்வெட்டு விவகாரம்: இக்ரம் உள்ளிட்ட அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இக்ரம் உள்ளிட்ட ஆறு பேரின் விளக்கமறியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில், கடந்த...

வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

இலங்கையின் வடக்கு மாகாண சபையின் 2018ஆம் நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம், ஏகமனதாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 114வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கடந்த 111வது அமர்வின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சுக்கள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை உறுப்பினர்களின்...

மீண்டும் ஸ்தம்பிதம் அடையுமா இலங்கை? பெற்றோல் தொடர்பாக புதிய சிக்கல்!

பெற்றோலிய ஊழியர்கள் சங்கமானது மீண்டும் ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய சங்கத்தின் இணைப்பாளர் பீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கவுள்ளதாகவும், இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த...

சின்னங்களைப் பார்க்காமல் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்: அங்கஜன்

சின்னங்களைப் பார்க்காமல் நல்லவர்களுக்கு மக்கள் வாக்களித்தால் யாழ்ப்பாணம் முன்னேறும் என இலங்கை சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இம்முறை தேர்தலில் உண்மையானவர்களையும், நேர்மையானவர்களையும் சுதந்திரகட்சியின் சார்பில் தேர்தலுக்காக களமிறக்கியுள்ளோம் என அவர்...

வடக்கு முதல்வரின் குரல் தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்து ஒலிக்க வேண்டும்

நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத்தை இழந்து நிற்கின்ற நிலையில், அந்த நிலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் வடக்கு முதலமைச்சர் இனி எமது மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த...
Loading posts...

All posts loaded

No more posts