வடக்கு முதலமைச்சர் ஒரு அரசியல்வாதியாக தோற்றுவிட்டார்: டிலான் பெரேரா

சிறந்த நீதியரசரான வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைந்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியையே சரியான முறையில் முழுமையாக பயன்படுத்தாத முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மலேஷியா வழங்கும் நிதியை என்ன செய்வார் என்று புரியவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்த...

வட்டுக்கோட்டை விபத்தில் பெண் பலி!

வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.>தனது மகனுடன் உந்துருளியில் கோயிலுக்கு சென்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.42 வயதுடைய சுப்பிரமணியம் தர்மணி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.காயமடைந்த 7 வயதுடைய அவரது மகன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Widget

முல்லைத்தீவில் பரவும் மர்மக் காய்ச்சல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் தொடர்பில் ஆராய விஷேட வைத்தியக் குழு ஆய்வுகளை நடாத்தியுள்ள போதும் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த விஷேட வைத்திய குழு கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த குழுவினர்...

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போவோம்: முஸ்ஸிம் காங்கிரஸ்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முஸ்ஸிம் காங்கிரஸ் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் மன்னாரில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து முதற்கட்ட பேச்சுவார்ததையினை மேற்கொள்ளும் வகையில் மு.காவின் உயர்மட்ட குழுவினர் விசேட உலங்குவானூர்தி மூலம் கொழும்பில் இருந்து மன்னார்...

மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை: சித்தார்தன்

எமது அமைப்பின் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என புளோட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நேற்று (செவ்வாக்கிழமை) கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற தர்மலிங்கம் சித்தார்தன்...

மலேசியப் பிரதமருடன் வடக்கு முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளார். மலேசியப் பிரதமருடனான சந்திப்புக் குறித்து முதலமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, மலேஷியப் பிரதம மந்திரியுடன் சந்திப்பு 19.12.2017 இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் சுளித்த முகத்தையும் மீறி மலேஷிய பிரதம மந்திரியுடனான வடமாகாண முதலமைச்சரின் சந்திப்பு சுமுகமாக “ஷங்க்ரி –...

சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு...

பிறப்பு சான்றிதழ் அற்றோருக்கு தேசிய அடையாள அட்டை!

பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவொன்று செயற்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக தெரிவித்தார். வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல்...

வீதியை விட்டு விலகி கடலினுள் பாய்ந்த வாகனம்

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான வாகனம், வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்துள்ளது. இந்த விபத்தானது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வல்லைவெளி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. ‘டபிள் கப்’ வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளான போதும், இச் சம்பவத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டினால், அவற்றிற்கு மேல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டி ஒட்டப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இத்தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் அடங்கிய சுவரொட்டி அவற்றிற்கு...

யாழில் முன்னாள் புளொட் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!!

புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து பயன்படுத்தக்க துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள்,ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். அவற்றைப் பதுக்கிவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அந்த வீட்டின்...

இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வட, வட மத்திய கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி காணப்படும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவில்லை: தமிழரசு கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வட்டாரங்களின் வேட்பாளர்களின்...

ஆசனப்பங்கீடு : த.தே.கூ. பங்காளிக்கட்சிகளின் பேச்சுவார்த்தை இன்றும் தொடரும்!

வடக்கு – கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இறுதி நாள் வரும் 21 ஆம் திகதி (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியாகும். இந்த நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலொ ஆகியவற்றின் உயர்மட்டத்தினர் நேற்றிரவு...

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக வித்தியாதரன் போட்டி??

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இந்தப் பொது அணியில் சமூக அமைப்புகள், தமிழ் கட்சிகள் சில, வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்துள்ளன எனவும், அவர்களின் ஆதரவுடனேயே வித்தியைக் களமிறக்க பேச்சுகள் இடம்பெறுகின்றன. தமிழர்...

கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி

கிளிநொச்சி-யாழ்ப்பாணம் வீதியில் ஆனையிறவு தட்டுவாங்கொட்டி பிரதேத்தில், திங்கட்கிழமை மாலை 6:40க்கு இடம்பெற்ற விபத்தில், இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். ஆனையிறவு, தட்டுவாங்கொட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கராசா செந்தில்நாதன் (வயது 28), யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த நல்லத்தம்பி துஷாந்தன் (வயது 36) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுங்கள்! : பிரித்தானியா

இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். தமிழர் தாயகப் பகுதியில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், 300 நாட்களை கடந்துள்ளன. இந்நிலையில், இலங்கை...

உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெப்ரவரி 10!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்தமானி எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

சந்திரகுமாரை கூட்டமைப்பில் இணைத்தால் கட்சியை விட்டு வெளியேறுவதாக சிறிதரன் எச்சரிக்கை!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைத்தால் கட்சியைவிட்டுத் தான் வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எச்சரித்துள்ளார். தமிழ் தேசிக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம், சமூக...

மக்களிடமிருந்து தப்பித்த வாள்வெட்டுக்குழு பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர், அப்பகுதி மக்களால் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளனர். யாழ். மக்களை அண்மைய காலமாக அச்சுறுத்தி வரும் வாள்வெட்டுக் குழுவினர், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சகிதம் கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்தனர். இதன்போது ஊர்மக்கள் ஒன்றிணைந்து வாள்வெட்டுக் குழுவினரை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதற்கு ஈடுகொடுக்க...
Loading posts...

All posts loaded

No more posts