- Friday
- May 15th, 2026
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிவில் உடைதரித்த தமிழ் மொழி பேசும் பொலிஸாரால், இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி காண்பித்து பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று மணி நேரத்தத்துக்குப் பின்னர் மீள கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ், ஐந்து சந்திப் பகுதியில், கடந்த சனிக்கிழமை (23) பகல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர் கருத்துத்...
பணம் வாங்கிவிட்டு நெல்லியடி பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கரவெட்டி - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே, இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கரவெட்டி - காட்டுப்புலம் பகுதியில், இளைஞன் ஒருவர்,...
கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதினால் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை , வடக்கு ,கிழக்கு, வடமத்தி, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலதிணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் நுவரெலியா, இரத்தினபுரி, காலி ,மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இத்தகவலை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான மேலதிக ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச...
வவுனியாவின், உள்ளூர் பேரூந்து சேவைகளை பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து இரு வாரங்களுக்கு செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியாவில் 195 மில்லியன் ரூபா...
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் நல்லூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று 25.12.2017 திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் 04 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு...
வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று கூறுபவர்கள் முதலமைச்சர் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே அவ்வாறு விமர்சித்துவருகின்றனர் என்று தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் மத்திய அமைச்சருமான டிலான் பெரேரா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சிறந்த நீதியரசராக இருந்தபோதும் அரசியல்வாதியாகத்...
அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து சபைகளின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கொள்ளும் இறுதி தினம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் ஆராயப்பட்டு யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட...
வடமாகாண தலைமை சங்கநாயக்கரும் ஸ்ரீ நாக விகாரையின் தலைமை விகாராதிபதியுமான மீகஹஜதுரே ஞானரத்ன தேரர் காலமானார். அவர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில்...
போரில் அழிந்துபோன தேசத்தையும் சிதைந்துபோன மக்களையும் மீள கட்டியெழுப்ப உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு அவசியம். அதற்கு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டம் முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை, தமிழ் தேசியக்...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார். யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். வரலாற்றில்...
அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கான தடை நீக்கம் என்பதன் மூலம் நாட்டில் சுகாதாரம் தொடர்பான அவதானம் இல்லாது போய்விட்டதா? அல்லது வெளிநாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தவறான கொள்கையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு தீர்மானித்துள்ள விடயம் தொடர்பாக நேற்று...
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், அன்னலெட்சுமி...
புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நேற்று (வியாழக்கிழமை) குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கூட்டமைப்பில் அங்கம்...
யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தமை தொடர்பாக 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், வலி. வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என அந்தக் கட்சியின் நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன. வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் இம்முறையும் போட்டியிடுவதுடன், மாவை சேனாதிராசாவின் மகனும் போட்டியிடுகிறார். போர்க்காலத்தில் இந்தியாவில்...
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினரை வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை பொலிஸார் நேற்று முற்படுத்தினர். அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் அறிக்கையை பொலிஸார் தாக்கல் செய்தனர். “யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள...
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இவ் உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கு அதிகளவான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுபணத்தை...
தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும்என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை நேற்று (புதன்கிழமை) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் மக்கள் ஒரு...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிற்கும் IM யப்பான் நிறுவனத்திற்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக ஜப்பானில் தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக யப்பான் மொழி ஆற்றலில் N4 தரத்துடன் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கமுடியும். பணியாளர் சேவை (Caregiver) தொழிலுக்கு 150 பெண்களுக்கு தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
