வடமாகாண தலைமை சங்கநாயக்கரும் ஸ்ரீ நாக விகாரையின் தலைமை விகாராதிபதியுமான மீகஹஜதுரே ஞானரத்ன தேரர் காலமானார்.

அவர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலமானார்.
அவரது இறுதிக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வான்படை மற்றும் ராணுவத்தினரின் பங்களிப்புடன் அவரது பூதவுடல் வான் வழியாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்பு படையினர் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.