Ad Widget

தேர்தலுக்கு பின்னர் வேலையற்றபட்டதாரிகளுக்கு நியமனம்: ஆளூனர் உறுதி

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து கலந்துரையாடினர்.

கடந்த முறை வழங்கப்பட்ட பட்டதாரிகளது ஆசிரியர் நியமனத்தின் போது இடம்பெற்றிருந்த முறைகேடுகள் குறித்தும், எஞ்சிய பட்டதாரிகளின் நிலை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளூனர், தேர்தல் காலம் என்பதன் காரணமாக வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாதிருப்பதாக தெரிவித்தார்.

எனவே தேர்தல் முடிந்த பின்னர் அடுத்த கட்டமாக ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்புக்களை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புக்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்திசெய்வதற்கான மேன்முறையீட்டுச் சபை ஒன்றை நிறுவியுள்ளதாகவும் அதன் மூலமாக பட்டதாரிகளது பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் ஆளூனர் உறுதியளித்ததாக பட்டத்தாரிகள் தெரிவித்தனர்.

Related Posts