Ad Widget

சுரேஸ் இல்லாமலே ஜெயிப்போம்!! : எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அண்மையில் வெளியேறியுள்ளது.

இந்தக் கட்சி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,

“தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்று பங்காளிக் கட்சிகளும், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் ஒன்றாக இணைந்து போட்டியிடும்.

கூட்டமைப்பை விட்டு ஈபிஆர்எல்எவ் வெளியேற முடிவு செய்தமை ஜனநாயக ரீதியாக அவர்கள் எடுத்த முடிவு.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சொந்தமாக அரசியல் கட்சியை உருவாக்கியுள்ள போதிலும், புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பை விட்டு சிலர் வெளியேறி, ஏனையோருடன் இணைந்து போட்டியிடுவதால், தேர்தலில் ஏனைய கட்சிகள் வெற்றி பெற்று விட முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts