Ad Widget

மத்திய அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம்: சுமந்திரன்

அரசியலமைப்பின் ஊடாக அதிகாரங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை மத்திய அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புத் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அதிகாரப்பகிர்வானது அரசியல்வாதிகளுக்கானது என்றால், இலகுவாகவே நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யப்போவதில்லை.

அதற்குக் காரணம் அதிகாரங்கள் மக்களிடத்தில் இருக்கவேண்டும். மக்களுடைய பிரதிநிதிகள் ஆட்சி செய்யவேண்டும் என்பதனாலேயே நாங்கள் மக்களுக்கு அதிகாரங்கள் கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.

எனவே ஒழுங்கான முறையில் அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரங்கள் பகிரப்படுகின்ற வரையில் ஆட்சி அதிகாரங்களை மத்திய அரசுடன் நாங்கள் கையாள மாட்டோம் என்ற கொள்கையுடன் இருக்கின்றோம்” என எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts