Ad Widget

யாழ். பல்கலையில் மாவீரர்தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

உலகெங்கும் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாவீரர் தினம் பல்கலைக்கழக சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில், உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீத்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டிருந்ததுடன் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்ட இவ்வஞ்சலி நிகழ்வில் 2000 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன், புரட்சிப்பாடல்கள் இசைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதிலும் சிவப்பு – மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

யுத்தத்தின் பின்னர் இம்முறை மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் வடக்கு – கிழக்கில் மிகவும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts