மட்டுவில் பிரதேசத்தில் வாள்களுடன் கைது செய்யப்பட்ட இருவர் இன்று நீதிமன்றத்தில்

மட்டுவில், சிவன்கோவில் வீதியில் நேற்று வாள்களுடன் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சாவகச்சேரி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 22 வயதான...

ஆயுதப் போராட்டத் தலைமைகளில் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராகப் பிரபாகரன் மட்டுமே இருந்தார் : பொ.ஐங்கரநேசன்

பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது அக்கறையும் ஒன்று. உலக சூழல்தினத்துக்காகத் தங்கள் மாணவர் தினத்தையே மாற்றி அமைத்தவர் அவர். நான் அறிந்த ஆயுதப் போராட்டத் தலைமைகளில் சுற்றுச்சூழல் மீது இப்படி அக்கறை கொண்ட ஒரு தலைவராகப்...
Ad Widget

வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வர அஞ்சுகின்றனர்!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டுச் சம்பவங்களால், வெளிநாடுகளில் உள்ளவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு அஞ்சுவதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் குறிப்பிட்டுள்ளார். யுத்தப் பாதிப்பிற்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தின், வித்தியானந்தா கல்லூரி மாணவர்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் உதவியில் நேற்று (திங்கட்கிழமை) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே...

வடக்கில் நாளை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் அனைவரும் நாளைக் காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடமாகாண...

பாரிய புனரமைப்பின் பின்னர் பாசனத்துக்காக இரணைமடுக்குளம் திறப்பு

இரணைமடுக்குளத்தில் கடந்த இரண்டு வருட காலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த பாரிய புனரமைப்புப் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், காலபோகச் செய்கைக்காக இரணைமடுக்குளம் நேற்று திங்கட்கிழமை (20.11.2017) திறந்து விடப்பட்டுள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திலும் வட்டக்கச்சி ஒற்றைக்கைப்பிள்ளையார் ஆலயத்திலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழ்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான...

தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கத் தவறினால் அடுத்த தலைமுறை ஆயுதம் தூக்க நேரிடும்! பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

இப்போது யுத்தம் இல்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் சத்தம் இல்லாமல் தமிழ்ச் சிறுபான்மை இனத்தைப் பெரும்பான்மைக்குள் கரைத்து, முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாகக் கட்டமைக்கும் முயற்சியை இப்போதும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அரசாங்கம் எமக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கத் தவறினால், எமது பிரதேசத்தை ஆட்சி செய்யும் அரசியல் அதிகாரத்தை எங்களிடம் தரத்தவறினால், நாங்கள் இப்போது...

த.தே.ம முன்னணி அ.இ.த.காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா சங்கரத்தை வீதி, வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. வட்டு மண்ணின் மைந்தன் பிரபல இளம் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்களது தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. கடந்த சனிக்கிழமை (18-11-2017) பிற்பகல் 3.30 மணியளவில் மேற்படி நிகழ்வு ஆரம்பமானது. அலுவலகத்தின்...

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகைமாத விழா சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி ஆரம்பமானது

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத விழா கடந்த சனிக்கிழமை (18.011.2017) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி நடைபெற்றுள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக மாகாண விவசாய அமைச்சாலும் பொது அமைப்புகளாலும் பொதுமக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் சங்கிலியன் பூங்காவில் மலர்க் கண்காட்சியுடன் கூடிய...

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் விஷேட ஒருநாள் சேவை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டையை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 25ம் திகதி விஷேட ஒருநாள் சேவை திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. அன்றைய தினம் பாடசாலை விண்ணப்பதாரிகள் வருவது கட்டாயம் அல்ல என்றும், அந்த மாணவர்களின் உறவு முறையை...

இயற்கையை நேசிக்கும் ஒரு சமூகம் உருவாக வேண்டும்: வடமாகாண முதல்வர்

இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகைமாத விழா சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி ஆரம்பமானது தமிழ்த்;தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத விழா இன்று சனிக்கிழமை (18.011.2017) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி...

சிங்களவர்கள் வெற்றி என்ற இறுமாப்பை களைய வேண்டும் என்கிறார் : ரெஜினோல்ட் குர்ரே

அரசியல் அமைப்பை கொண்டு இன ஒற்றுமையை கட்டியெழுப்புவதை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குர்ரே தெரிவித்துள்ளார். புத்தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் புதிய நூலக கட்டிடடத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார். இங்கு...

“வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது!! இராணுவத்தினரும் குறைக்கப்படமாட்டார்கள்”

"வடக்கில் முக்கிய இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. அங்கு நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரும் குறைக்கப்படமாட்டார்கள்" என்று நாடாளுமன்றில் அறிவித்தது அரசு. இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கோரினாலும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அவர்களுடன் அரசு சமரசத்துக்குச் செல்லாது என்று முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றில் இடம்பெற்ற...

பருத்தித்துறை- பொன்னாலை வீதி போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது!!

யாழ்.கோட்டைக்கு இராணுவம் செல்லாது. அடுத்த சில தினங்களில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. யாழ். கோட்டைக்குள் இராணுவம் முகாம்களை அமைக்கமாட்டாதென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ். கோட்டைக்கு அனுப்ப வேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். எனினும் அவருடைய கருத்திற்கு...

பியர் விடயத்தில் பின்வாங்கமாட்டேன்: மங்கள உறுதி!

வரவு – செலவுத் திட்டத்தில் பியர் விலையைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மதுபானங்களில் உள்ள மதுசாரத்தின் அளவுக்கு அமைய வரி விதிப்பது என்பது சர்வதேசத்தால் பின்பற்றப்படும் முறை என்றும், அதன் ஊடாக அரச வரி வருமானத்தை பலமானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி

நோர்வே அரசாங்கம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர்...

இரணைமடு காணிகள் அளவிடப்படுவதன் நோக்கம் என்ன?: மக்கள் கேள்வி

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பிலுள்ள கிளிநொச்சி இரணைமடு பகுதி காணிகள் அளவிடப்படுவதன் நோக்கம் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளர். குறித்த காணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) அளவிடப்பட்டு வருகின்றன. இக்காணிகளில் பொதுமக்களது காணிகளும் உள்ளடங்குகின்ற நிலையிலேயே அவர்கள் இவ்வாறு வினவியுள்ளனர். விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட பண்ணைக்காணியே இவ்வாறு நில...

போதை மிகுந்த நாடாக மாற்ற நல்லாட்சி முயற்சிக்கிறதா? சுகிர்தன் கேள்வி

போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று பியர் விலையைக் குறைத்து போதை மிகுந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறதா ? என வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், கேள்வியெழுப்பியுள்ளார். வடகிழக்கு மாகாணங்களில் பியர் விலை குறைப்பு பாரிய தாக்கத்தை உண்டாகும் எனவும் அரசாங்கம் பியர் விலை குறைப்பு தீர்மானத்தை மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை...

வடமாகாண கல்வி அமைச்சரால் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு புதிய சிக்கல்

வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்தமைக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். மாகாண அமைச்சர்கள் அரசியல் அமைப்பை ஏற்பதாக சத்தியபிரமாணம் செய்துள்ள நிலையில், வடமாகாண கல்வி அமைச்சரின் இந்த செயல் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர்...

காலியின் சில பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில்!!!

காலியின் சிலபகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக கருவாதோட்டம், மாஹப்புகல, வெலிபிட்டிமோதர, உக்வத்த, ஜின்தோட்ட மற்றும் பியன்திகம கிராமசேவையாளர் பிரிவுகளில் இந்த ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காலி, கிங்தொட்டை என்ற கிராம பகுதியில் அடையாளம் தெரியாத...

வட.மாகாணக் கல்வியமைச்சர் பதவிக்கு சர்வேஸ்வரன் பொருத்தமற்றவர்: இராதாகிருஸ்ணன்!

வட.மாகாணக் கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடியினை ஏற்ற மறுத்ததால் அவர் அமைச்சராகப் பதவி வகிப்பதற்குப் பொருத்தமற்றவர் என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களிற்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வட.மாகாணக்...
Loading posts...

All posts loaded

No more posts