சுரேஸ் பிரேமசந்திரன், விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்!! தமிழரசு கட்சி அழைப்பு

தமிழர்களின் ஏழு தசாப்த கால துன்பங்களுக்கு முடிவு காண்பதற்கு, சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆவா குழுத் தலைவர் தப்பியோட்டம்!

யாழில் இடம்பெற்ற பிரதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரும், ஆவா குழுவின் தலைவருமான விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளார். யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபரை, மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இன்று (வெள்ளிக்கிழமை) அழைத்துச் சென்றபோது அவர் தப்பிச் சென்றுள்ளார் குறித்த சந்தேகநபருக்கு நேற்று யாழ். நீதவான் நீதிமன்றம்...
Ad Widget

பியர் விலை குறைக்கப்பட்டதற்கு யாழில் எதிர்ப்பு

பாதீட்டில் பியர் விலை குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அதை உடனடியாக மீண்டும் அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மதுசாரத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு பேரணி இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. போதையற்ற நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்துவருகின்ற நிலையில் போதைப்பானமான பியரின் விலையினை அரசாங்கம் குறைத்திருப்பதென்பதை...

அரியாலை துப்பாக்கி சூடு : சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை

யாழ்.அரியாலை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் சந்தேக நபர்களான காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டவில்லை. யாழ்.அரியாலை கிழக்கு பகுதியை சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் (வயது 24) எனும் இளைஞன் கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்து இருந்தார். குறித்த துப்பாக்கி சூட்டு...

யாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; களத்தில் குதிக்கின்றது பொலிஸ் விஷேட அதிரடிப் படை!!

யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு சிரேஷ்ட...

வாள் வெட்டு சந்தேகநபர்களுக்கு பிணை!

யாழில்.வாள் வெட்டுக் குழுவை சேர்ந்துவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் மூவரை பிணையில் செல்ல அனுமதித்தார். யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இரவு வாள்களுடன் நடமாடினார்கள் என மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட...

குழந்தையை பிரசவித்த தாய் உயிரிழப்பு: கணவன் பொலிஸில் முறைப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளந்தாய் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்து அவரது கணவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய குருபரன் பிரசாந்தி என்ற இளந்தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரது கணவன் தெரிவித்தபோது, ‘இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 12 ஆம்...

குடாநாட்டில் அதிகரிக்கும் குற்றங்கள்! : நீதிபதி இளஞ்செழியன் தீவிர அக்கறை

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுடன், யாழ்ப்பாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் இச்சந்திப்பு இடம்பெற்றது. வடக்கில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவது, பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், இவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய...

புதிய அரசியலமைப்பிற்கு மஹிந்த இடையூறாக இருக்க கூடாது: சம்பந்தன் கோரிக்கை!

இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒரு மார்க்கமாக அரசியலமைப்பினைப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவுசெலுவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மஹிந்தவிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”புதிய அரசியலமைப்பினை...

பருத்தித்துறையில் 15 கையடக்கத் தொலைபேசிகளுடன் இருவர் கைது!

யாழ். பருத்தித்துறையில் கொள்ளையிடப்பட்ட 15 கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் பருத்தித்துறை Abans காட்சியறையை உடைத்து பல பெறுமதியான கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பருத்தித்துறை பொலிஸார் மற்றும் யாழ் .மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றய தினம் 15...

அரசின் பியர் வரிக்குறைப்பிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

இளைஞர்களை மது பாவனைக்கு தூண்டிவிடும் அரசின் பியர் வரிக் குறைப்பு யோசனைக்கு எதிர்ப்பு குரல் கொடுக்க ஒன்றிணையுமாறு யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்ட ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது. அதன்போது ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர்களும் கையளிக்கப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள்,...

ஜனாதிபதியிடமிருந்து ஆக்கபூர்வமான பதிலில்லை: காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கவலை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டார். தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியை சந்தித்திருந்த நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட...

தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்

காலா­வ­தி­யான மருந்துப் பொருள்­கள், ஆயி­ரத்­துக்­கும் மேலான கண்­ணா­டிப் போத்­தல்­கள், பொலித்­தீன்­கள், ஊசி­வ­கை­கள் போன்ற மருத்­து­வக் கழி­வு­கள் கடந்த மூன்று நாள்­க­ளாக வட­ம­ராட்சி தொண்­ட­மா­னாறு கடற்­ப­ரப்­பில் கரை­யொ­துங்குகின்­றன. இவை ஆபத்­தான மருத்­து­வக் கழி­வு­களா என்­கிற சந்­தே­கம் மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது. அந்­தப் பொருள்­கள் இந்­தி­யா­வி­லி­ருந்தே இங்கு வரு­கின்­றன என சுகா­தா­ரப் பிரி­வி­னர் சந்­தே­கிக்­கின்­ற­னர். பொருள்­க­ளில் உள்ள இந்­திய...

சந்திகளில் கூடுபவர்கள் கும்பலாக மோ.சைக்கிள்களில் செல்பவர்களை விசாரிக்க பொலிஸாருக்கு உத்தரவு

"வடக்கு மாகாணத்தில் சந்திகளில் கூடிநின்று அரட்டை அடிப்பவர்கள், கும்பலாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை விசாரணை நடத்தவேண்டும். இரவு வேளைகளில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்" இவ்வாறு வடக்கிலுள்ள அத்தனை பொலிஸ் நிலையங்களுக்கும் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார். வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி ஆகுதியான மறவர்களுக்கான நினைவேந்தல் இடம்பெறவுள்ள...

யாழ் மாநகரசபை ஆணையாளராக ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்

வடமாகாண திணைக்களங்களின் புதிய தலைமை அதிகாரிகளுக்கான புதிய நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல் குரே வழங்கி வைத்தார். யாழ் மாநகரசபை ஆணையாளராக பதவி வகித்த பொ.வாகீசன் வடமாகாண கூட்டுறவு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை முன்னாள் பிரதேச செயலாளராக இருந்த ஆர்.ரி.ஜெயசீலன் யாழ் மாநகரசபை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளராக...

மஹிந்தவுடன் இணைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்!

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒன்றிணைந்த...

ராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

ராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு ராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு நேற்றய தினம் (புதன்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த...

ஜெனீவாவில் இலங்கை மீண்டும் வாக்குறுதி அளித்தது

ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய...

யாழ்.கோட்டைக்குள் ராணுவத்தை அனுப்பியே தீருவேன் : ஆளுநர் குரே

வரலாற்று தொன்மைமிக்க சின்னமான யாழ்ப்பாண கோட்டையில் இலங்கை படையினரை நிலைநிறுத்துவது குறித்து பல எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும், இந்நடவடிக்கையை செயற்படுத்துவதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே உறுதியாக உள்ளார். அந்ந வகையில் வடக்கில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை யாழ்ப்பாண கோட்டைக்கு அனுப்பிவைக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆளுநர்...

தேர்தலுக்கு முன்பாக நியமனங்களை வழங்குங்கள்: வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

“தேர்தலுக்கு முன்னர் நியமனங்களை வழங்கு” என வலியுறுத்தி, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வடமாகாண ஆளுநர் செயலகத்தின் முன்னால் கூடிய வேலையற்ற பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, கௌரவ பிரதமரே..! யாழ் வருகையின்போது தந்த வாக்குறுதிகள் எங்கே?, தேர்தலுக்கு முன் அபிவிருத்தி உத்தியோக நியமனங்களை வழங்கு…! போன்ற...
Loading posts...

All posts loaded

No more posts