Ad Widget

பியர் விலை குறைக்கப்பட்டதற்கு யாழில் எதிர்ப்பு

பாதீட்டில் பியர் விலை குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அதை உடனடியாக மீண்டும் அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மதுசாரத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு பேரணி இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

போதையற்ற நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்துவருகின்ற நிலையில் போதைப்பானமான பியரின் விலையினை அரசாங்கம் குறைத்திருப்பதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்று இந்த கவனயீர்ப்பை மேற்கொள்பவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றநிலையில், இந்த விலைக்குறைப்பானது குற்றச்சம்பவங்களை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு பியருக்கான விலையை மீண்டும் அதிகரித்து அவர் வழங்கிய போதையற்ற நாடு எனும் வாக்குறிதியை பூரணமாக அமுல்படுத்துமாறும் ஆர்ப்பாட்டக்கார்ர்கள் வலியுறுத்தினர்.

ஜனாதிபதிக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் வடமாகாண ஆளுனர் அலுவலகத்திலும் யாழ் மாவட்ட அரச அதிபரிடமும் இவர்கள் கையளித்தனர்.

வடமாகணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் மற்றும் வடமாகாண நல்லொழுக்க சம்மேளனம் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்

Related Posts