Ad Widget

4,800 பட்­ட­தா­ரி­க­ளுக்கே அடுத்த மாதம் நிய­ம­னம்!!

கடந்த ஏப்­ரல் மாதம் இடம்­பெற்ற நேர்­மு­கத் தேர்­வு­க­ளில் தெரிவு செய்­யப்­பட்ட பட்­ட­தா­ரி­க­ளில் 4 ஆயி­ரத்து 800 பேருக்கு முதல்­கட்­ட­மாக நிய­ம­னம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் இடம்­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­திலே அனு­மதி கிடைக்­கப் பெற்­றுள்­ளது.

பட்­ட­தா­ரி­களை அரச சேவை­யில் இணைத்­துக் கொள்­வ­தற்­காக நடத்­த­பட்ட நேர்­மு­கத் தேர்­வில் 25 புள்­ளி­க­ளுக்கு அதி­க­மாக பெற்­றுக் கொண்­ட­வர்­களே இணைத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ள­னர்.

20ஆயி­ரம் பட்­ட­தா­ரி­களை உள்­வாங்­கும் நோக்­கில் நேர்­மு­கத் தேர்வு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இருப்­பி­னும் முதல் கட்­ட­மாக 4 ஆயி­ரத்து 800 பேருக்கே நிய­ம­னம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

புள்ளி வழங்­கு­த­லில் குள­று­ப­டி­கள் இருப்­ப­தா­க­வும், எல்­லாப் பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஒரே தட­வை­யில் நிய­ம­னம் வழங்­க­வேண்­டும் என்­றும், வேலை­யற்ற பட்­ட­தா­ரி­கள் போராட்­டம் நடத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Related Posts