- Wednesday
- May 13th, 2026
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கூட்டத்துக்கான பொது அழைப்பை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் அறிவித்தார்....
சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு யுவதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் துணை இயக்குனருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.1 கிலோ தங்க ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார். குறித்த இருவரும்...
மாகாண மட்டத்திலும் மத்திய அரச நிறுவனங்களிலும் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு, வேலையற்ற பட்டதாரிகளை உடனடியாக நியமிக்க நடவடிக்கை வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மாவடிவேம்பு மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை)...
மாநகர சபையின் மாண்பினைப் பேணும் வகையில் சபையில் எழுந்துநின்று கருத்துக்களை தெரிவிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் முன்னாள் மாநகர முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜாவை இன்று (செவ்வாய்க்கிழமை) கேட்டுள்ளார். யாழ். மாநகர சபையின் 2ஆவது அமர்வானது யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் ஆரம்பமாகியபோதே இவ்வாறு...
இலங்கை இரயில் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பாக மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் யாழ். இரயில் நிலைய அதிபரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து, குறித்த ஊழியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஊழியர் யாழ். ரயிலில் பயணித்த பெண்ணொருவருடன் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் காணொளி உட்பட முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டமையை அடுத்தே இன்று...
தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால், தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் ,வாள்கள், இரும்புக் கம்பிகள் என்பவற்றுடன் சுமார் 20 பேர் , 10 மோட்டார் சைக்கிள்களில் இரவிரவாக அந்தப் பகுதியில் நடமாடியதால் பொதுமக்களிடையே பெரும் அச்சநிலை தோன்றியிருந்தது. மாற்றுக்...
சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் நேற்று (07) யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் நேற்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், யாழ்.புகையிரத...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதி கிடைத்துள்ள போதிலும், அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமக்கான ஊதியம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தும், அதற்கான அனுமதியை வழங்குமாறும் குறித்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை...
இன்று வடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் உஷ்ணமான காலநிலை நிலவும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை பொலன்னறுவை மாவட்டத்திலும் கடும் உஷ்ணமான காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும், வௌிக்கள செயற்பாடுகளில் அதிக அளவு ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யாழிற்கு சிங்கள அரசாங்க அதிபர்களை அல்லது ஊழியர்களை அனுப்ப விரும்பினால் அனுப்புங்கள் பார்க்கலாம் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார். வட மாகாணத்தில் உள்ள அரச வேலைகளுக்கு சிங்களவர்கள் நியமிக்கப்படுகின்றமை தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இருப்பினும், முல்லைத்தீவிலும், வவுனியாவிலும், மன்னாரிலும் சிங்கள அரசாங்க அதிபர்கள் குடியேற்றங்களுக்கு...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் 4 கிலோ கேரள கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா போதைத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவரை விசாரணைகளின்...
யாழ். நீர்வேலிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே இடத்தினைச் சேர்ந்த இருவர்...
முள்ளிவாய்க்காலில் நடைபெறும் தமிழர் இனவழிப்பு நினைவுதினத்தை வடக்கு மாகாணசபை தாமே நடத்துவோமென அறிவித்துள்ளமையானது மனவேதனையைத் தருவதாக என யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி...
உலகில் மிகச் சிறந்த 18 ரயில் பயணங்களில் இலங்கையிலுள்ள ‘யாழ்தேவி’ ரயில் பயணமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான யாழ்தேவி ரயில் சேவையே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது. லண்டன் கார்டியன் நாளிதழ் உலகின் மிகச் சிறந்த ரயில் மார்க்கங்கங்களை அண்மையில் பட்டியலிட்டிருந்தது. அதில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்தேவி பயணத்தில் முதலாம் வகுப்பு, 2ஆம்...
இலங்கை மின்சார சபையில் பெருமளவு மோசடிகள் இடம்பெறுகின்றன என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார். “இலங்கை மின்சார சபைக்கு வரும் ஒவ்வொரு நிலக்கரி கப்பலுக்கும் 120 மில்லியன் ரூபா மோசடி செய்யப்படுகிறது. விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் ஒவ்வொரு அலகுக்கும் 14 ரூபா மோசடி செய்யப்படுகிறது. மின்சாரத் துறையில் முதலீடு செய்ய முன்வந்த வெளிநாட்டு...
க.பொ.த உயர்தர பரீட்சையின் போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்த புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார். எதிர்வரக்கூடிய க.பொ.த உயர்தர பரீட்சையில்...
ஆஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 131 இலங்கையர்கள் மலேசியக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், தன்ஜுங் ஜெமுக் துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த எற்ரா ( Etra) என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 131 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே முதலாம்...
புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று பார்வையிட்ட வடக்கு முதல்வர், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். ஜனாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பாக தான் கதைத்ததாகவும், அவரும் இதுகுறித்து புரிந்துகொண்டபோதிலும், அதனை...
யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கும் பணிகள் அண்மையில் இடைநிறுத்தப்பட்டன....
எமது எதிர்கால சந்ததியினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள போதைக் கலாசாரத்தையும், வன்முறைக் கலாசாரத்தையும் இல்லாதொழிக்க தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென யாழ். மாநகரசபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். ‘வன்முறை தவிர்ப்போம் போதையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளிலான சமூக மட்ட நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
