Ad Widget

யாழிற்கு சிங்கள அதிபர்களை அனுப்பிப்பாருங்கள் : சவால் விடுக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்

யாழிற்கு சிங்கள அரசாங்க அதிபர்களை அல்லது ஊழியர்களை அனுப்ப விரும்பினால் அனுப்புங்கள் பார்க்கலாம் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

வட மாகாணத்தில் உள்ள அரச வேலைகளுக்கு சிங்களவர்கள் நியமிக்கப்படுகின்றமை தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இருப்பினும், முல்லைத்தீவிலும், வவுனியாவிலும், மன்னாரிலும் சிங்கள அரசாங்க அதிபர்கள் குடியேற்றங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

மத்திய அரசாங்கம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வடமாகாணத்தில் உள்ள அரச வேலைவாய்ப்பிற்கு சிங்களவர்களை நியமித்துக் கொண்டிருக்கின்றனர். இது பாரிய பிரச்சினையாகும். இது தொடர்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து கதைத்தே பேச வேண்டியுள்ளது.

மேலும் தமிழ் அரசாங்க அதிபர்களை சிங்கள பிரதேசங்களுக்கும், சிங்கள அரசாங்க ஊழியர்களை தமிழ் பிரதேசங்களுக்கும் அனுப்புவதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் அனுப்பாமல் முல்லைத்தீவுக்கும், மன்னாருக்கும், வவுனியாவுக்கும் அனுப்பினால் அவர்கள் அங்கே சுதந்திரமாக சிங்கள குடியேற்றங்களுக்கு துணைபோகிறார்கள். அல்லது அவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் கேட்கிறேன் வடமாகாணத்திற்கு சிங்கள அரசாங்க அதிபர்களை நியமிக்க வேண்டும் என நினைத்தால் யாழ்ப்பாணம் அனுப்புங்கள் பார்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts