- Wednesday
- May 13th, 2026
பால்மாவிற்கான புதிய விலை, மே மாதம் 5ஆம் திகதி முதல் உற்பத்திசெய்யப்படும் பால்மாவிற்கே பொருந்தும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. ஆனால், கையிருப்பிலுள்ள பால்மாவை புதிய விலைக்கு விற்பனை செய்வோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்...
உழைப்பின் மகிமையை உலகிற்கு எடுத்தியம்பும் தொழிலாளர் தினம், இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. மே முதலாம் திகதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினமானது, வெசாக் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது. அந்தவகையில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பேரணிகளும், ஊர்வலங்களும் இடம்பெறவுள்ளன. இற்றைக்கு 132 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் திரண்ட தொழிலாளர்கள் 8...
யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயற்படும் வகையில் அரச உத்தியோகத்தர்களின் சேவை அமைய வேண்டும் என வட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் கீழுள்ள பொது நிர்வாக சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கான 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (சனிக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன. வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (சனிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தலைமையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிடுகையில், “நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் 2017ம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் உட்பட தகுதியுள்ள...
தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 14 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு பரிசோதனையின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று கடற்படையினர் தெரிவித்தனர்...
சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் ஆவாக்குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று இரவு (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 4 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டினை மேற்கொள்வதற்கு எத்தணித்த போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,...
வடக்கு கல்வி அமைச்சின் செயலாளராக எஸ்.சத்தியசீலனும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனும் நியமிக்கப்பட்டனர்.வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயால் இன்று (5) இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனத்திலிருந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமை வகித்த எஸ்.சத்தியசீலன், தற்போது மாகாண கல்வி...
பெற்றோலின் விலையை 20 ரூபாவாலும் டிசலின் விலையை 12 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக விலை சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விலைச்சூத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட போதும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. வரும் செவ்வாய்கிழமை ஒப்புதலளிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோலின் விலையை 15 ரூபாவாலும் டிசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதலளிக்கும் என நிதி...
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று முற்பகல் வாள்வெட்டுக்குள்ளானார் என பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தினார்" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில்...
கடந்த வருட உயர்தரப் பெறுபெறுகளின் அடிப்படையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நுண்மதிப் பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறியத் தந்துள்ளார். யாழ்ப்பாணம் அனுராதபுரம் கண்டி கொழும்பு மாத்தறை பதுளை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 21 பரீட்சை நிலையங்களில் இப் பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்...
“முல்லைத்தீவில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேறுமாறு மக்கள் கோரவில்லை – அரசியல்வாதிகளே கோருகின்றனர் என வடக்கு மாகாண உயர் அதிகாரி ஒருவர் கொழும்பில் நடந்த கூட்டத்தில் உரக்கக் கூறியுள்ளார்.இவரைப்போன்றவர்கள் இருக்கும் வரையில் எம்மால் படையினரை வெளியேற்ற முடியாது” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரால் ஊடகங்களுக்கு இன்று மாலை அனுப்பிவைத்த வாரந்திர கேள்வி...
அரசாங்கமும், படைத்தரப்பும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்கு எடுத்துக் கூறுவது தங்களது கடமை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் படைத்தரப்பினர் நிலைகொண்டுள்ளமை குறித்து, வாரத்துக்கு ஒரு கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ன நினைக்கும் படைத்தரப்பு என்ன நினைக்கும் என்பது தவறான...
இராணுவத்தளபதி ஒருவர் தமிழ் அரசியற் கட்சிகளை வெளிப்படையாக விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் ஒரு செயலாகும் என வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சியின் ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அவ்வறிக்கையில்,...
பல்கலைக்கழக மாணவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வை, அவர்களுடன் இணைந்து நடாத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைக்கழக...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் சிலர் இன்றையதினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை சண்முகானந்தா இந்துக் கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை ஆதரித்து வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ்ப்பாணம்...
“முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தில் அரசியல் கட்சிகளின் கட்சிசார் அரசியலுக்கு இடமில்லை என்பதுடன், தமது சுயலாப அரசியலையும், தனிப்பட்ட கட்சிகளை விமர்சிப்பதுக்கும் அனுமதிக்க முடியாது” என யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்.மறைமாவட்ட நீதி சமாதானத்துக்கான ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்புத்துறை குருமடத்தில் இன்று (04) இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்....
இறுதி யுத்தத்தில் தமது உயிர்களை நாட்டிற்காக தியாகம் செய்த முப்படையினரையும் கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் இன்று (04) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ். பலாலி படைத்தலைமையகத்தில் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் ரனவிரு சேவா சங்க தலைவி அனேமா பொன்சேகா மற்றும் வட மாகாண...
இறக்குமதியாகும் பால்மாவின் 400 கிராம் பக்கற்றுன் விலையை 20 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அனுமதியளித்துள்ளது. அத்துடன் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கற்றின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வணிக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார். இதேவேளை, பால்மா வகைகளின் விலையை...
முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு மேற்கொள்ளும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த முகாம் அமைந்துள்ள இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவைகள் மக்கள் கோரியும் இந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவீடு செய்வதற்காக சென்ற போது, மக்கள்...
முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. சிங்கபூருடனான வர்த்தக உடன்படிக்கை மற்றும் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்ட மூலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக வழங்கப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
