Ad Widget

யாழில் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் சிலர் இன்றையதினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை சண்முகானந்தா இந்துக் கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை ஆதரித்து வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் சிலர் இன்றையதினம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை நான்கு சந்தியிலுள்ள ஜிம்மா பள்ளி வாசலில் இடம்பெற்ற மதியநேர ஜிம்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றுகூடிய இவர்கள் தமது எதிர்புக்களை வெளியிட்டனர்

இந்த விடயத்தில் தனது சொந்த மதத்தை மதிக்காமல் அஸ்மின் தெரிவித்துவரும் கருத்துக்களை அவர் நிறுத்திக்கொள்வதுடன் இதற்காக அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன் அயூப் அஸ்மினுடைய உருவ பொம்மையையும் ஊர்வலமாக எடுத்துச்சென்றதுடன் நான்குசந்தி பகுதியில் அதனை தீயிட்டு கொழுத்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.

Related Posts