- Wednesday
- May 13th, 2026
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் 91 எச்.ஐ.வி நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக பாலியல் சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாலியல்சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் டிலானி ராஜபக்ஷ கூறுகையில், "கடந்த வருடம்...
ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளை 10 மணித்தியாலங்களுக்கு மேல் பணியில் ஈடுபடுத்த பணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விடையம் தொடர்பில் முறைப்பாடு செய்யவதற்கு அங்கு பணிபுரிபவர்கள் முன்வருவதில்லை என நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள ஆடை...
தமிழ்த் தேசத்தின் குரலாக ஒலிக்கும் ஊடகப் போராளிகளின் நினைவாக யாழில் அமைந்துள்ள நினைவுத் தூபி வரலாற்றுப் வரலாற்றுப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுமென யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் யாழ்.பிரதான வீதியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியின் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து...
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று வட. மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுகூறல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கொலைசெய்யப்பட்ட...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...
பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளார். இந்நிலையில் அவரை யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. நீதிபதியின் மாற்றம் தொடர்பான தகவல்கள் யாழ் குடா நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நீதிபதியின்...
“வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 57 ஆயிரம் பேருக்கும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கப்படவேண்டும். அதுவே ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு வழங்கிய உறுதிமொழி. அதனை வலியுறுத்தி வரும் மே 8ஆம் திகதி கொழும்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” இவ்வாறு வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பட்டதாரிகளை...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு யாழ் நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் இ.எ.ஆனந்தராஜா அவர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிகரான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று கூறினார் என்றும் அதனை கயேந்திரகுமாரே அவரூடாக திட்டமிட்டு செய்வித்தார் என்றும் திரிபுபடுத்தி வெளியிடப்பட்ட...
45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தபாலதிபரை வரும் 16ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அனுராதபுரம் பகுதியில் தபாலதிபராக கடமையாற்றும் சந்தேகநபர், முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் அவரை ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....
கிளிநொச்சி – இரணைதீவில் கிராம மக்களது போரட்டம் தொடர்பில் அரச நிர்வாகத்திற்கு எதிராக யாழ். மனித உரிமை ஆணைகுழுவிடம் முறை பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்களே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பிரச்சினைகளுடன் சம்மந்தப்பட்ட...
நாட்டின் சில மாகாணங்களில் இன்று அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதானநிலையம் அறிவித்துள்ளது. இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந்நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகளவில் வெப்பம் உணரப்படுமென காநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தவேண்டுமென நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் அந்த விசாரணைகள் நடப்பதில் சிலருக்கு விருப்பமில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிலருக்கு கொல்லப்பட்ட...
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளதால் அதன் இறக்குமதியை தற்போது இடைநிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால்மாவின் விலை 3,250 இருந்து 3,350 அமெரிக்க டொலர்களாகும், ஆனால் அடுத்த ஜூன் மாதம் வரை 3,400 இருந்து 3,500 அமெரிக்க டொலர்களாக உயர்வடைய கூடும், என்பதனால் இறக்குமதி தடைபட்டுள்ளதாக அவர்கள்...
“வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளுர் பத்திரிகையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...
சமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாக தெரிய வந்துள்ளது. வௌிநாடுகளில் பணி புரிகின்ற...
தமிழர் தாயகப் பகுதியில் பௌத்த நிகழ்ச்சி நிரலை திணிக்க முயன்றால், ஈழத் தமிழனின் குரல் அதற்கெதிராக ஒலிக்குமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அதன் விளைவுகளை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமென்று அவர் மேலும் தெரிவித்தார். வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அலங்கரிக்கப்பட்ட தோரணைகள், வெளிச்சக்கூடுகள் என்பன இம்முறை வழமையை விட...
அரசாங்கம் தனது கட்டளைகளால் எம்மை அடிமைப்படுத்த முடியாது என்பதை இந்த தொழிலாளர் தினத்தில் நிரூபித்துள்ளோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘பௌத்த பிக்குகளின் சொல் கேட்டு நடக்கும்...
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவானது, தமிழ் தேசியத்தின் இறுதித் தலைவன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்பதை வெளிக்காட்டி நிற்கின்றதென சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். கிட்டு பூங்காவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் ஆகியோருக்கு...
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்படி புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு, பிரதி அமைச்சர்கள் 1. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி – முத்து சிவலிங்கம் 2. மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி...
Loading posts...
All posts loaded
No more posts
